பக்தி இலக்கியக் காலந்தொட்டுத் தெய்வங் களுக்கும், மனிதர் களுக்கும் பல்வேறு நிறங்கள் பேசப்படுகின்றன. கடவுள் எல்லாமாக இருக் கிறான் என்று குறிக்க வந்த மாணிக்கவாசகர், “நிறங்களோர் அய்ந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான்” என் கிறார். எனவே நிறங்கள் மொத்தம் அய்ந்து என் பது பழந்தமிழர் கருத்து என்று தெரிகிறது. வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, புகை நிறம் என அவற்றை உரையாசிரியர் விளக்குகின் றனர். தேவாரம் சிவபெருமானைப் 'பவள வண் ணத்தினர்' என்றும், உமையவளை ‘மரகதக் கொடி' எனப் பச்சை நிறமுடையவளாகவும் குறிக்கின்றது. இருளின் வண்ணமும் அந்தியின் வண்ணமும்கூடச் சிவபெருமானின் வண்ண மெனக் குறிக்கும் மற்றொரு தேவாரப் பாடல். வண்ணம் என்ற சொல் அழகு என்ற பொருளி லும் வழங்கப்பட்டிருப்பதனை ‘வண்ண மார்பில் தாரும் கொன்றை' என்ற சங்கப் பாடலாலும் அறிகின்றோம்.
பக்தி
இலக்கியங்களில் நாம் காணும் மற்
றொரு செய்தி கறுப்பு அழகுக்குரிய
நிறம், அது ஒளி வீசும்
என்பது. திருமாலை ஆண்டாள் 'கண்ணன் என்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேன்' என்கிறார்.
ஆழ்வார்கள் பலரும் திருமாலைக் 'கரிய
மாணிக்கம்' என்று பாடியுள்ள னர்.
இராமனது கரிய உடம்பிலிருந்து ஒளி
கிளர்ந்தது என்ற செய்தியை 'வெய்யோன்
ஒளி தன் மேனியின் விரிசோதியின்
மறைய' என்று கம்பர் பாடுகிறார்.
கண்ணப்பர் பிறந்தபோது அவரது கறுத்தமேனி ஒளியுடையதாக
இருந்தது என்பதனைக் 'கருங்கதிர் விரிக்கும் மேனி காமருகுழவி' என்று
பாடுகிறார் சேக்கிழார். தன் மீதுபட்ட ஒளியைப்
பளபளப்புடைய கருப்புநிற மனிதத்தோல் 'எதிரொளி' செய்துகாட்டும் என் பது கம்பரும்
சேக்கிழாரும் காட்டும் அழகுக் காட்சியாகும்.
நன்னூல்
301ஆம் சூத்திரத்துக்கான விருத்தி யுரையில் அவ்வுரைகாரர் 'கண்' என்னும் வேற்
றுமை உருபினை விளக்குகிறார். எடுத்துக்காட் டாகத் தரப்படும் சொற்றொடர்
'கறுப்பின் கண் மிக்குள்ளது அழகு'
என்பதாகும். நெருப்பின் உள்ளார்ந்த தன்மை தெறல் (சுடுதல்)
என்பது போலக் கறுப்பின் உள்ளார்ந்த
தன்மையே அழகுதான் என்பது அக்காலத்தில் நிலவிய
கருத்து எனத் தெரிகிறது. அக்காலம்
வரை அழகோடு சேர்த்து எண்ணப்பட்ட
கறுப்பு நிறம் பின்னர் ஏன்
தனது மதிப்பை இழந்தது? அழ கின்மை என்பதற்கு
எடுத்துக் காட்டாக அது எப்படி மாறிப்
போனது? தாழ்வுக்கும், இழிவுக்கும் உரியதாகக் கறுப்பு நிறம் கருதப்பட்டதன் சமூக
வரலாற்றுக் காரணிகள் யாவை? இக்கேள்வி களுக்கான
விடையினைச் சமூக அமைப்பில் காண
இயலாது. மாறாக அதிகாரம் சார்ந்த
அரசியல் அமைப்புக் குள்ளே தேடவேண்டும். அதுவும்
தமிழ் அரசுகள் வீழ்ச்சியடைந்த 13ஆம் நூற்றாண்டின் இறுதிக்குப்
பின்னரே தேட வேண்டும்.
கி.பி. 1310 முதல் 1323 வரை தமிழ்நாடு இசுலாமியர்
படையெடுப் பால் அலைக்கழிந்தது. மீண்டும்
1383இல் விசய நகரப் பேரரசின்
தளபதிகளின் படையெடுப்பால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
விசய நகரப் பேரரசு இசுலாமியருக்கு
எதிராக வைதிக நெறியை உயர்ந்த
இலட்சியமா கக் கொண்டு தோன்றிய
அரசமரபாகும். ஆட் சியதிகாரம் விசயநகரப்
பேரரசின் தளபதிகளின் கைக்கு மாறியவுடன் தமிழ்
நாடு ஒரு பண்பாட்டு நெருக்கடியை
எதிர்கொண்டது. அதாவது வரலாற்றில் முதல்முறையாகத்
தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரம் பிறமொழி பேசும் ஆட்சி யாளர்களிடம்
நிலையாக மாறியது. இந்த ஆட்சி யாளரைத்
தொடர்ந்து தெலுங்கு மொழி பேசும் மக்கள்
பெருமளவு குடியேறத் தொடங்கினர். பிராமணர் தொடங்கிச் சக்கிலியர் ஈறாக இந்தக் குடியேற்றம்
அமைந்தது பிராமணர், பிராமணரை அடுத்த 'மேல் சாதியினரான' புலால்
உண்ணாத ரெட்டியார், ராஜுக்கள் இவர்களுக்கு அடுத்த படிநிலைகளில் அமைந்த
நாயுடு (வெலமா, கம்மவார், கவர,
காப்பு, பலிஜா), இவர்களுக்கும் அடுத்த நிலையில் உள்ள
ஆசாரிகள், பெரும் பாலும் புன்செய்
நிலத்து விவசாயிகளான நாயக்கர், மிகத்தாழ்நிலையில் உள்ள செருப்புத் தைக்கும்
சக்கிலியர், தோட்டி வேலை செய்யும்
சக்கிலியா என இவர்களை வகைப்படுத்திக்
காணலாம். இவர்களோடு சவுராட்டிரப் பகுதியிலி ருந்து ஏற்கனவே வெளியேறி
ஆந்திரத்தில் இருந்த நெசவுத் தொழில்
செய்யும் சாதியான சவுராட்டிரர்களும் தமிழகத்தில் வந்து குடியேறி னர்.
இக்கால கட்டத்தில் தமிழ்நாட்டில் தனித்து வளர்ந்திருந்த சைவ, வைணவ மதங்கள்
பின் னுக்குத் தள்ளப்பட்டன. வைதிக நெறியே முன்
னிறுத்தப்பட்டது. 'இந்து மதம்' அதிகாரத்தில்
அமர்ந்தது. தமிழ் அக்காலத்தில் ஆட்சி
மொழி யாக இல்லை. ஆட்சியாளர்களின்
மொழியாகிய தெலுங்கு பேணப்பட்டது. அரசியல் அதிகாரத் தில், வைதிக நெறியின்
காவலர்களான பிராம ணர்க்கும் சமசுகிருதத்திற்கும்
முன்னுரிமை தரப் பட்டது.
இவர்கள்
ஆட்சி முடியும் தறுவாயில் கி.பி. 1700க்குப்
பிறகு உருது பேசும் வடநாட்டு
முசுலிம் கள் அங்கங்கே சில
பகுதிகளில் ஆட்சியதிகாரத் தைக் கைப்பற்றினர். மிகச்சில
பகுதிகளில் பிரஞ்சுக்காரரும் ஏனைய பகுதிகளில் பிரிட்டிஷ்
காரர்களும் ஆட்சியைக் கைப்பற்றினர்.
கி.பி. 14ஆம் நூற்றாண்டின்
தொடக்கம் முதலாகத் தமிழ்நாட்டின் அரசியல் அதிகாரத் தைக் கையிலே வைத்திருந்த
அனைத்து ஆட்சி யாளர்களும், தமிழர்களின்
சராசரி நிறத்திலிருந்து வேறுபட்ட சிவந்த
நிறமுடையவர்கள். அவர் களால் ஆதரிக்கப்பட்ட
வடநாட்டில் இருந்து வந்த இசுலாமிய ஞானிகள்,
அய்ரோப்பியப் பாதிரிமார்கள், பிராமணர்கள் ஆகிய அனை வரும்
தமிழர்களைவிடச் சிவந்த நிறம் உடைய
வர்கள். எனவே அய்ந்து நூற்றாண்டுக்கு
மேலா கத் தமிழ்நாட்டில் அரசியல்
அதிகாரமும், அர சியல் சித்தாந்தங்களையும்
நடைமுறைகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற ஆன்மீக அதிகாரமும் சிவந்த
நிறமுடையவர்களின் கையிலேயே இருந்தது. எனவே இந்த நிறம்
அதிகாரத்தின் நிறமாக, உயர்ந்த ஆன்மீகத்தின் நிறமாக, மேட்டிமையின் சின்னமாக, அழகு நிறைந்ததாகக் காட்டப்பட்டது.
சுருக்கமாகச் சொல்வதானால், தமிழ் பேசும் பெருவாரியான
மக்கள் கூட்டத் தாரின் மரபுவழி அழகுணர்ச்சி
மனிதத் தோலின் நிறத்தைப் பொறுத்தமட்டில்
திசைமாற்றம் பெற் றது. எதிர்நிலையில்
சொல்வதானால், கறுப்பு நிறமுடைய மக்கள் அழகற்றவர்களாகவும், ஆளப்படுபவர்களாகவும்,
அதிகாரத்திற்குத் தகுதியற்றவர்களாகவும், இழிவின் சின்னமாகவும் கருதப்பட்டனர். இன்றளவும் இதுவே தொடர் கதையாகி
வருகிறது. எனவேதான் தளைகளி லிருந்து தங்களை
விலக்கிக் காட்ட விரும்பும் தனி
மனிதர்கள், அதாவது தனிவாழ்வின் பொரு
ளாதார மேன்மையிலும் அதிகாரத்தின்மீதும் வேட்கை உடையவர்கள் சிவப்புத்
தோலை வெறியுடன் விரும்புகிறார்கள். எனவே 'கறுப்பு - சிவப்பு'
என்பது வெறும் அழகுணர்ச்சி சார்ந்த
பிரச்சினையன்று. அது மரபுவழி அழகுணர்ச்சியிலிருந்து
திசை மாற்றப்பட்டவர்களின் அதிகார வேட்கைக்கும் மரபுவழிச்
சங்கிலியால் பிணைக் கப்பட்ட எளிய
மக்களுக்கும் இடையிலே நிலவி வரும் ஒரு
முரண்பாடு ஆகும்."
கறுப்பு,
சிவப்பு, - நிறம் எப்படிப்பட்ட கோணத்திலிருந்து
இவரது அறிவுக்கண்ணால் பார்க்கப்பட்டு, அந்த கண்ணொளிக் காட்சி
இலக்கியச் செல்வமாக செம்மொழிக்குச் சிறப்புச் சேர்த்துள்ளது பார்த்தீர்களா?