மத்திய அரசுடன் டிச.29 இல் பேச்சுவார்த்தை டில்லியில் போராடிவரும் விவசாயிகள் அறிவிப்பு

புதுடில்லி,டிச.27 மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டில்லியின் எல்லைப்பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர்.

விவசாயிகளின்போராட்டத்துக்குஆதர வாகவும்,  வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், தமிழக அரசைக் கண்டித்தும் திமுக தலைமையிலான எதிர்க்கட்சிகள் தமி ழகத்தில் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்துள்ளன.

இந்நிலையில், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறும் கோரிக்கையில் உறுதியாக இருக்கும் விவசாயிகள், கரோனா அச்சுறுத்தல், கடுமையான குளிர் ஆகியவற்றையும் பொருட்படுத்தாமல் டில்லியின் எல்லைகளை ஆக்கிரமித்து போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகள் தோல் வியிலேயே முடிந்தன. குறிப்பாக வேளாண் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளும் மத்திய அரசின் யோசனையை விவசாயிகள் நிரா கரித்து விட்டார்கள்.

எனினும், மத்திய அரசு விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என் றும், அது குறித்து பேச்சுவார்த்தை நிகழ்ச்சி நிரலில் சேர்க்க வேண்டும் எனவும் கூறி வரும் விவசாயிகள், அவ்வாறு உறுதியளித்தால் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்து இருந்தனர்.

ஆனால், மத்திய பாஜக அரசின் அலட் சியம் காரணமாக டில்லியில் விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்ததுடன், நாடுதழுவிய முழு அடைப்பு உள்ளிட்ட போராட்டங்களாக வெடித்தது.

இதனிடையே, 40 விவசாய அமைப்புகள் இணைந்த கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சாவின் நிர்வாகிகள் ஆலோ சனை நடத்தினர். இதன் முடிவில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடர்வது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி மத்திய வேளாண் துறை செயலாளர் விவேக் அகர்வாலுக்கு விவசாயிகள் கடிதம் அனுப்பினர். அதில், ‘மத்திய அரசு மற்றும் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இடையிலான பேச்சுவார்த்தையை 29ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு வைத்துக்கொள்ளலாம்என்று குறிப்பிட்டு இருந்தனர்.

பாரதிய கிசான் யூனியன் அமைப்பின் மூத்த தலைவர் திகெயித் கூறுகையில், ‘மத்திய அரசு எங்களுடன் பேச்சுவார்த்தைக்கு விரும் பிய நிலையில், அதற்கான தேதி மற்றும் நேரத்தை நாங்கள் தேர்வு செய்து அறிவிக்க கூறியிருந்ததன்பேரில், வருகிற 29 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் சம்மதித்து இருக்கிறோம். இனி எங்களை எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று முடிவு செய்வது அரசின் கையில் இருக்கிறதுஎன்று தெரிவித்தார்.

அதேநேரம் 3 சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான வழிமுறைகள் மற்றும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்த உறுதி போன்றவற்றை பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சி நிரலில் அரசு இணைக்க வேண்டும் என்றும் விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தெரிவித்தனர். பஞ்சாப், அரியானா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க தொடர்ந்து டில்லியை நோக்கி திரண்ட வண்ணமே உள்ளனர். ஒரு மாத கால விவ சாயிகளின் போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்றே வருகிறது. இந்நிலையிலேயே போராடி வரும் விவசாயிகள் மத்திய அரசின் கோரிக்கைக்கிணங்க தற்பொழுது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments