ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியின் பிரச்சாரம் காரணமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. ஆனால் மோடியின் வெற்றியால் இதுவரை நாட்டுக்கு ஏற்பட்ட மாற்றம் என்ன? பொருளாதார வீழ்ச்சி, வேலையின்மை, லடாக் எல்லை யில் சீன ராணுவம் ஊடுருவல் இவை தான் நடைபெற்றுள்ளன. பின் எதற்காக, மோடி எதன் அடிப்படையில் அவரது வெற்றி நிகழ்கிறது? மேலும் வெற்றி பெற துடிப்பது ஏன்? என மூத்த எழுத்தாளர் ஆகார் படேல் தனது கட்டுரையில் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • காஷ்மீரில் எதிர்க்கட்சிகள் உருவாக்கியுள்ள குப்கார் கூட்டணியில் இணைந்துள்ள காங்கிரஸ், 370 பிரிவு ரத்து குறித்து தங்களது கருத்தினை மக்களிடம் தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக கூறியுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • கரோனா தொற்று காரணமாக, நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத் தொடரை, அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரோடு இணைத்து ஒன்றாக நடத்திட வாய்ப்பு உள்ளது.

  • ஏற்கனவே, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரும், அதேபோன்று, செப்டம்பர் மாத மழைக்கால கூட்டத் தொடரும், கரோனா தொற்று காரணமாக குறைந்த நாட்களே நடைபெற்றன.


தி டெலிகிராப்:  • பீகார் சட்டசபையில் ஆளும் கட்சியான நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜன நாயகக் கூட்டணி சார்பில் ஒரு முஸ்லீம் வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லை. சுதந்திரத்திற்குப் பிறகு பீகார் சட்டமன்றத்தில் முதன்முறையாக முஸ்லீம் பிரதி நிதித்துவம் இல்லாமல் ஆளும் கட்சி இருப்பது இதுவே முதல் முறை. எதிர்கட்சிகள் சார்பில் ஆர்.ஜே.டி.-8, காங்கிரஸ்-4, இடதுசாரி கட்சிகள்-1 ஓவைசிக்கட்சி -5, லோக் ஜன்சக்திக் கட்சி-1, பி.எஸ்.பி. -1 என 20 முஸ்லீம் சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.


குடந்தை கருணா


17.11.2020


Comments