பட்டுக்கோட்டை கழக மாவட்டத்தில் அடைமழையிலும் விடாத இயக்கப் பணி

10 மணி நேரத்தில் 112 விடுதலை சந்தா சேகரித்து ரூ.1,19,700 கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினர்பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம், பேராவூரணி ஒன்றியத்தில் திரட்டப்பட்ட 56 விடுதலை சந்தாக்களை மாவட்டச் செயலாளர் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினர் இரா.நீலகண்டன், பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் அரு.நல்லத்தம்பி, மாவட்ட அமைப்பாளர் சோம. நீலகண்டன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் தமிழ்ச்செல்வன், ஒன்றியச் செயலாளர் மணிகண்டன், சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவர் சொக்கந்தபுரம் சி.செகன்நாதன், ஒன்றியச் செயலாளர் மூர்த்தி, மாவட்ட இளைஞரணித் தலைவர்  சுப்பிரமணியன் உள்ளிட்ட தோழர்கள் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் 56 விடுதலை சந்தாக்களை வழங்கினர். உடன்: மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன்,  மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்,  பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வை.சிற்பிசேகர், மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த், பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, தொண்டராம்பட்டு உ.வீரமணி. பட்டுக்கோட்டை நகர திராவிடர் கழகம் சார்பில் திரட்டப்பட் 31 விடுதலை சந்தாக்களை நகரத் தலைவர் வை. சிற்பி சேகர் , மாவட்ட ப.க தலைவர் ஆ.இரத்தினசபாபதி, ஒன்றியச் செயலாளர் ஏனாதி ரெங்கசாமி, சி.திலீபன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர். மதுக்கூர் ஒன்றியம் சார்பில் மாவட்டத் தலைவர் பெ.வீரையன், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராஜ், புலவஞ்சி காமராஜ் ஆகியோர் 25 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் ஜெயக்குமாரிடம் வழங்கினர் (16.11.2020).


பட்டுக்கோட்டைகழக மாவட்டத்தில் 16.11.2020 திங்களன்று கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில்  மாவட்டத் தலைவர் பெ.வீரையன் மாவட்டச் செயலாளர்  பேராவூரணி வை. சிதம்பரம்  மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்தன் மாநில விவசாயத்  தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர்கள் அரு. நல்லத்தம்பி, இரா.நீலகண்டன், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் வை. சேர், மாவட்ட ப.க தலைவர் ரத்தினசபாபதி, புலவஞ்சி காமராஜ், மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து. துரைராஜ் தொண்டராம்பட்டு வீரமணி உள்ளிட்டோர் விடுதலை சந்தா சேர்ப்பு பணியில் ஈடுபட்டனர்.  காலை 9.30மணிக்கு புலவஞ்சியில் தொடங்கி, வடக்கு மதுக்கூர், மதுக்கூர், ஆத்திக்கோட்டை, படப்பைக்காடு, பட்டுக்கோட்டை, லெட்சத்தோப்பு, பள்ளத்தூர், சொக்கனாபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு 8 மணிக்கு பேராவூரணியில்  சந்தா திரட்டும் பணி முடிவடைந்தது. 10 மணி நேரத்தில் 112 சந்தாக்கள் சேகரித்து ரூ.1,19,700 வழங்கி மகிழ்ந்தனர். அனைத்து பகுதிகளிலும் மாவட்ட ஒன்றிய நகர, கிளைக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அன்புடன் வரேவேற்று சந்தாக்களை வழங்கி மகிழ்ந்தனர், சந்தித்த அனைத்து கட்சி நண்பர்களும் இன்முகத் துடன் சந்தாக்களை வழங்கினர். அடைமழையிலும் விடாது விடுதலை சந்தா சேர்ப்புப் பணி நடைபெற்றது. பேராவூரணி சேதுபாசத்திரம் ஒன்றியம் 56 சந்தா, பட்டுக்கோட்டை நகரம் 31, மதுக்கூர் ஒன்றியம் 25 மொத்தம் 112 சந்தாக்கள்.


 


Comments