வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது!

தமிழர் தலைவர் அறிக்கை


தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை முதல் (6.11.2020) தமிழகம் தழுவிய அளவில் வேல் யாத்திரை ஒன்று தொடங்கி நடத்திடத் திட்டமிடப்பட்டிருந்தது.


இந்த யாத்திரைபற்றி பல தளங்களிலும் சர்ச்சைகள் வெடித்தன! பா.ஜ.க.வின் அண்மைக்கால தொடர் வன்முறை நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி இந்த மத யாத்திரைக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகள் காவல்துறைக்கு மனு கொடுத்தன; பொதுநல வழக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டுள்ள நிலையில்,


கரோனா (கோவிட் 19) தொற்று இரண்டாம் நிலை பாதிப்பு அதிகரிக்கும் இந்தக் காலகட்டத்தில், வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க இயலாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது - வரவேற்கத்தக்கதே!


தக்க சமயத்தில் தக்க முடிவுகளை எடுத்த தமிழ்நாடு அரசுக்குப் பாராட்டு!


நிலைமையின் தன்மையைப் புரிந்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் முடிவு வரவேற்கத்தக்கது!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்


சென்னை


5.11.2020


Comments