மக்கள் விரோத வேளாண் சட்டம்: குடியரசுத் தலைவரைச் சந்திக்கக் காங்கிரஸ் திட்டம்

புதுடில்லி, நவ.19 மத்திய அரசின் விவசாய மசோதாவுக்கு எதிராக ஆதரவைத் திரட்டுவதற்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக மகாராட்டிராவில் உள்ள காங்கிரஸ் கட்சி, விவசாய மசோதாவிற்கு எதிரான பத்திரத்தை வெளியிட்டு அதில் விவசாயிகளின் கையெழுத்தை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.


நாங்கள் மாநிலத்தில் உள்ள 60 லட்சம் விவசாயிகளைச் சந்தித்து இந்த விவசாய மசோதாவைப் பற்றி அவர்களின் கருத்தைக் கேட்டறிந்துள்ளோம், இந்த சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது என்றும் காங்கிரஸ் தலைவரும் மாநில வருவாய்த் துறை அமைச்சருமான பாலாசாஹெப் தோரட் தெரிவித்துள்ளார்.


மகாராட்டிர மாநிலம் முழுவதும் உள்ள உள்ளூர் காங்கிரஸ் பிரிவினரால், விவசாயிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட கையொப்பங்களுடன் கூடிய பத்திரத்தை, பல அட்டைப் பெட்டிகளில் நிரப்பி அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் மகாராட்டிரா பொறுப்பாளரான எச்.கே பாட்டிலிடம் ஒப்படைக்கப்பட்டது.


இதைப்பற்றி எச்.கே பாட்டில் தெரிவித்துள்ளதாவது: கட்சியின் திட்டப்படி நாடு முழுவதும் உள்ள 2 கோடி விவசாயி களிடமிருந்து கையெழுத்துக்களைக் கட்சி சேகரித்து வருகிறது, கையெழுத்துக்களுடன் கூடிய இந்த பத்திரங்கள் நவம்பர் 19 ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் ஒப் படைக்கப்படும், இந்த பாத்திரங்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடியரசுத் தலைவரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எச்.கே பாட்டில் தெரிவித்துள்ளார்.


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்


பிரதமருக்கு மம்தா கடிதம்


கொல்கத்தா, நவ.19 நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை, தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மமதா பானர்ஜி கூறி இருப்ப தாவது: “நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 125 ஆவது பிறந்த நாள் வரும் 2022 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதி கொண் டாடப்படுகிறது. வங்கத்தின் சிறந்த தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரபோஸ் தேசியத்தின் கதாநாயகன். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக போராடியவர், நாட்டின் சுதந்திரத்துக்காக போராடியவர்களில் முக்கியமானவர். அனைத்து தலைமுறைகளுக்கும் உந்துசக்தியாக இருப்பவர். அவரது தலைமையின் கீழ், இந்திய தேசிய ராணுவத்தின் ஆயிரக்கணக்கான வீரர்கள் தாய்நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தனர்.


எனவே, மத்திய அரசானது ஜனவரி 23 ஆம் தேதியை தேசிய விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும். மேலும் ஒரு சிறந்த தலைவரான நேதாஜி காணாமல் போனது தொடர்பான பிரச்சினையில் உள்ள உண்மைகளை மக்கள் அறிய வேண்டும். அதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த கடிதத்தில் அவர் கோரி உள்ளார்.


உ.பி.யில் மீண்டும் மீண்டும் தாழ்த்தப்பட்ட பெண்கள்மீது வன்புணர்வு கொடுமை


புதுடில்லி,நவ.19 உத்தரப்பிரதேசத்தில் பாஜக  முதலமைச்சராக சாமியார் ஆட்சியில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமைகள், கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.  உ.பி.யில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்குள்ளாக் கப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்ட அதிர்ச்சிகரமான கொடுமை கடந்த 17.11.2020 அன்று நடைபெற்றுள்ளது.


தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சிறுமி ஆகஸ்ட் 14 அன்று ஹரிஷ் என்கிற சைதா என்பவனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவன்மீது காவல் துறை வழக்குப்பதிவு செய்து இந்தியத்தண்டனைச்  சட்டம் 376 ஆவது பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வன்கொடுமைத் தடைச் சட்டம் மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் சட்டம் ஆகியவற்றின் உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவன் சிறையில் அடைக்கப்பட்டான்.


அவனுக்குப் பிணை கிடைக்காததால், ஆத்திரமடைந்த உற வினர்கள் அச்சிறுமியை எரித்துக்கொன்றுள்ளனர்.   சம்பவத்தன்று, குற்றம் சாட்டப்பட்டவனின் அத்தையும் மாமாவும் மற்றும் அய்ந்து பேருடன் சேர்ந்துகொண்டு, அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்று,   சிறுமிமீது பெட்ரோலை ஊற்றி எரித்திருக்கின்றனர். இந்தச் சம்ப வம் தொடர்பாக காவல்துறையினர் ஏழு பேர்மீது முதல் தகவல் அறிக்கைப்பதிவு செய்து, மூன்று பேரை கைது செய்துள்ளனர்.


Comments