நாம் உண்ணும் உணவுத் தட்டில்  முக்கியமான தேவையாக இருக்கும் ஊட்டச்சத்து


- ஃபரூக் அப்துல்லா


 பொது நல மருத்துவர் சிவகங்கை


"ப்ரோட்டீன்" பவர் தரும் எனர்ஜி தரும் க்ரோத் ( வளர்ச்சி) தரும் என்று விளம்பரம் செய்யப்படும் அத்தனை நல்ல விசயங் களுக்கும் பொருத்தமானது ப்ரோட்டீன் என்னும் புரதச்சத்து. இத்தகைய ப்ரோட் டீனை உணவில் எப்படி எளிதாக அடை வது? இத்தகைய ப்ரோட்டீன் தேவையை அடைய உதவும் முக்கியமான எளிதான சிக்கனமான ஒரு உணவு உண்டெனில் அது "முட்டை" தான். புரதச்சத்தை உருவாக்கும் அடிப்படை மூலக்கூறுகளாக இருப்பவை "அமினோ அமிலங்கள்" இதுவரை நம்மால் இருபது அமினோ அமிலங்கள் கண்டறியப் பட்டுள்ளன இவற்றுள் ஹிஸ்டிடின், அய் சோலியூசின், லியூசின், லைசின், மெதி யோனின், ஃபினைல் அலனைன், த்ரி யோனின், ட்ரிப்டோஃபேன், வேலைன் ஆகிய மேற்சொன்ன ஒன்பது அமினோ அமிலங்கள் தவிர ஏனைய பதினொன்று அமினோ அமிலங்களையும் நம் உடல் தானாக உற்பத்தி செய்து கொள்ளும். மேற்சொன்ன இந்த ஒன்பது அமினோ அமிலங்களை உணவின் மூலம் மட்டுமே மனிதன் அடைய முடியும். எனவே இவற்றை உணவின் மூலம் மட்டுமே பெற முடிந்த அத்தியாவசிய அமினோ அமிலங் கள் என்று அழைக்கிறோம் .Essential Amino Acids எந்த ஒரு உணவில் இந்த ஒன்பதும் மொத்தமாக கிடைக்கிறதோ, அந்த உணவை   அதாவது நிறைவான புரதச்சத்து என்று அழைக்கிறோம். இப்படி யான ஒரு நிறைவான புரதச்சத்து நிரம்பிய உணவு தான் "நமது முட்டை".முட்டையில் இவையன்றி  வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் ஈ, வைட்ட மின் கே, வைட்டமின் பி2 , பி6, பி12 துத்த நாகம், செம்பு என்று மனிதனுக்கு தேவை யான அத்தனை ஊட்டச்சத்துகளும் இருக் கின்றன. முட்டையை வெறும் வெள்ளைக் கருவை மட்டும் உண்ணும் வழக்கம் இப் போது அதிகமாகி வருகிறது. ஆனால் அது தவறான போக்காகும். நம் உடலுக்குத் தேவையான புரதம் முழு முட்டையில் தான் முழுமையாக வந்து சேரும். கொழுப் புக்கு பயந்து அஞ்சி வெள்ளைக்கருவை மட்டும் சாப்பிட்டு மஞ்சள் கருவை ஒதுக்க வேண்டியதில்லை. தினமும்  மூன்று முட்டைகளை உண்பவர்களுக்கு ஆறு வாரங்கள் கழித்து ரத்தப்பரிசோதனை முடிவுகளில் இதயத்துக்கு நன்மை செய்யும் Hdl எனும் அதிக அடர்த்தி கொழுப்பு புரதங்கள் அதிகம் இருக்கின்றன. மேலும்  எனும் ஊறு செய்யும் குறை அடர்த்தி கொழுப்பு புரதங்கள் Ldl அதிகமானது போல் தோன்றினாலும் அவை  Ldl இல் உள்ள பெரிய ஊறு செய்யாத, Ldlகள் என்பதை ஆய்வுகள் நிரூபித்துள்ளன அது ஏன் என்று தெரியவில்லை. எந்த ஆய்வும் மூன்று முட்டைகளுக்கு மேல் உண்ணக் கொடுத்து செய்தமாதிரி தெரியவில்லை. ஆனால் தினமும் நான்கு முதல் பத்து முட்டைகள் வரை உண்டு ஆரோக்கியமாக வாழும் பலரை நான் அறிவேன்.


எம்மா மொரானோ எனும் இத்தாலியை சேர்ந்த பாட்டி 1899 இல் பிறந்து 2017 வரை வாழ்ந்தார். உலகில் முறையான பிறப்பு சான்றுகளுடன் நீண்ட நாள் வாழ்ந்த பெண்மணி அவர். மூன்று நூற்றாண்டுகளில் வாழ்ந்தவர் என்ற சிறப்பும் அவருக்கு உண்டு. 117 ஆண்டுகள் வாழ்ந்த அவரிடம் "உங்களது இந்த நீண்ட கால வாழ்க்கைக்கு உதவியது எது" என்று கேட்டதற்கு தயங் காமல் அவர் கூறிய பதில் "முட்டைகளை சளைக்காமல் உண்டது தான் எனது நீட்சிக் குக் காரணம்" என்றார். நான் சராசரியாக தினமும் அய்ந்து முட்டைகளை கடந்த அய்ந்து வருடங்களாக எடுத்து வருகிறேன். முட்டைகள் எனது ஆரோக்கியத்தை மீட் டெடுத்துள்ளன. என்னிடம் ஆலோசனை கேட்கவரும் குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைவருக்கும் நான் பரிந்து ரைக்கும் எளிய புரதச்சத்துக்கான தீர்வு முட்டைகள் தான். நாளொன்றுக்கு ஒருவர் மூன்று முட்டைகளை எடுக்கலாம். ஆனால் கட்டாயம் அந்த முட்டைகளை தனியாக செய்து தான் சாப்பிட வேண்டும். முட்டை தோசை முட்டை பரோட்டா என்று சாப் பிடக்கூடாது. ஆனால் நமக்கு பிடித்த மாதிரி அவித்த முட்டை, ஆம்லெட், பொடிமாஸ் என்று சாப்பிடலாம் பச்சையாக உண்பதை நான் ஆதரிப்பதில்லை.  இது தொற்று பரவுவதையும் முட்டையில் உள்ள அலர்ஜி உருவாக்கும் அவிடின் மூலம் நமக்கு ஊறு நேரச்செய்யலாம் என்பதால் முட்டைகளை பச்சையாக உண்ணாமல் சமைத்து உண்பதே சிறந்தது.


குழந்தைகளுக்கு ஆறு மாதம் முடிந்ததில் இருந்து  ஒரு முட்டையைக் கொடுத்துப் பழக்கலாம். ஒரு வயதுக்கு மேல் ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் வரை அவர்கள் சாப்பிட்டாலும் தடுக்க வேண்டியதில்லை. ஈவினிங் ஸ்நாக்காக. ஒரு ஆம்லெட் போட்டுக்கொடுக்கலாம்.  இது சாக்லேட் / பப்ஸ் / பர்கரை விடவும் சிறந்தது. முட்டைகளை உண்டால் பலருக்கு வாயுக்குத்து வருகிறது. அபான வாயு அடிக் கடி வெளியேறுகிறது என்று குற்றம் சாட்டு வார்கள் அதற்குத்தான் முன்பே கூறி னேன்.


கட்டாயம் முட்டைகளை தனி உண வாகவே உண்ண வேண்டும். முட்டையை சோறுடனோ, முட்டை தோசை என்றோ, முட்டை பரோட்டா என்றோ உண்ணக் கூடாது. என்னை சந்திக்கும் நீரிழிவு நோயர்களுக்கு ஒரு வேளை உணவாக முட்டைகளை பரிந்துரை செய்து வருகி றேன். நான்கு முட்டைகளை முழுதாக உண்டாலும் ரத்த சர்க்கரை 200அய்த் தாண்டாது.  காரணம் - முட்டைகளில்  கார் போஹைட்ரேட் கிடையாது. நாம் அவற்றை குக் செய்வதற்கு சேர்க்கும் சேர்மானங்களில் மாவுச்சத்து சிறிது சேரும் அவ்வளவு தான். கார்போ ஹைட்ரேட் இல்லாத உணவுப்பொருள் மிக மிக குறை வாகவே இன்சுலின் சுரப்பை தூண்டும். மிக மிக குறைவாகவே ரத்த க்ளூகோஸ் அள வுகளை ஏற்றும்; நீரிழிவு நோயர்களுக்கு இதனால் மூன்று நன்மைகள். முதல் நன்மை ரத்த சர்க்கரை ஏறாமல் இருப்பது, இரண் டாவது நன்மை நிறைவான புரதச்சத்து கிடைப்பது. மூன்றாவது நன்மை நரம்பு மண்டலத்திற்கு தேவையான வைட்டமின் பி12 கிடைப்பது. என்னை சந்திக்கும் எளிய மக்களுக்கு நான் பரிந்துரைக்கும் எளிய புரதம் முட்டை தான். தினமும் மூன்று முட் டைகள் எடுத்தால் போதும். அவர்களுக்கு வேறு ஹெல்த் ட்ரிங்குகளின் அவசியம் ஏற்படுவ தில்லை. ஏழை மக்களுக்கான பேலியோ வாழ்வியலை முட்டையை மட் டுமே பிரதானமாக வைத்து அமைக்கிறேன்.  அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறேன். நாட்டுக்கோழி முட்டையா? ப்ராய்லர் கோழி முட்டையா? வாத்து முட்டையா? என்று கேட்டால் எனது பதில் பறவை இனம் இடும் எந்த முட்டையும் சரி தான். பொரு ளாதார நிலைக்கு ஏற்றவாறு நாம் இருக்கும் இடத்தில் கிடைப்பதைப் பொறுத்து நாட்டுக் கோழியா? ப்ராய்லர் கோழியா? என்பதை அமைத்துக் கொள்ளலாம். எனது வருமா னத்துக்கு ஏற்ற தரமான முட்டை நாமக்கல் லேயர் கோழி முட்டைகள் தான். அந்த முட்டைகள் மீதும், ப்ராய்லர் கறி மீதும் வரம்பு மீறி அவதூறுகள் பரப்பப்பட்டு வருகின்றன. ஓரளவுக்கு மேல் அவற்றுக்கு மகத்துவம் இல்லை. என்னைப் பொறுத்த வரை எனது தேக ஆரோக்கியத்தில் முக்கியமான பங்கு முட்டைகளுக்கு உண்டு என்பதால் முட்டைகள் மீது எனக்கு அலாதி பிரியம் உண்டு.


Comments