கம்பி எண்ணும் காவிச் சாமியாரும் காவிகளின் நெருக்கங்களும்

மின்சாரம்வேலூர் மாவட்டம், திருவலம் பகுதியில், “ஸ்ரீ ஸர்வமங்களா” பீடத்தை நிறுவி, அதன் மடாதிபதியாக வலம் வந்தவர் 'ஸாந்தா சுவாமிகள்’ என்கிற சாமியார். இவரது இயற் பெயர் சாந்தகுமார்.


 அரசுப் பணியிலிருந்த இவர், பல ஆண்டுகளுக்கு முன்பு சிறீபுரம் தங்கக் கோவில் சாமியாருக்குக் கூடும் கூட்டத்தைப் பார்த்து  முதலில் அங்கு சென்று ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் வித்தை களை அங்கிருந்து கற்றுக்கொண்டு பிறகு தனது அரசுப் பதவியை விட்டுவிட்டு, சிறீ சர்வமங்களா பீடம் என்ற ஒன்றை நிறுவினார்.


மடம் ஆரம்பித்த ஒரே ஆண்டிலேயே ஆந்திரா, கருநாடகா, தெலங்கானா என புகழ்பெற்றுவிட்டார். இவரை “கும்பாபிசேக ஸ்பெசல் சாமியார்” என்று கூட அழைப் பார்கள்.  வெறும் இரண்டு ஆண்டுகளிலேயே பல ஏக்கர் சொத்துகள், சொகுசு மாளிகை, கார்கள் என்று வலம் வந்தார்.


வேலூர் முழுவதுமே இவரது சர்வமங் களா பீடத்தின் விளம்பரப் பதாகைகள் வண்ண விளக்குகளில் மின்னுவதைக் காணலாம்.


இதனை அடுத்து பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளின் தலைவர்கள் பலர் பீடத் திற்கு வந்து சந்தித்துச் செல்லவும் அவர் பிரபலமடைந்தார்; அவரின் செல்வாக்கும் கூடியது.


அரசியல் பிரபலங்களால் மேலும் வெளிச்சத்திற்கு வந்த இவரை “இந்து ஆச்சார்ய சபா’ என்னும் அமைப்பின் தமிழகத் தலைவராக இந்து அமைப்புகள் ஒன்றுகூடி தேர்ந்தெடுத்திருந்தன.


இவருடைய வரவு - செலவு, சொத்து வாங்குவது என அத்தனைப் பணம் தொடர் பானவற்றையும் நிர்வகிக்க  பெங்களூரைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி என்பவரை நிய மித்துள்ளார்.  கமலக்கார ரெட்டி பல சாமி யார்களுக்குக் கருப்புப் பணத்தை வெள்ளை யாக மாற்றித்தரும் வேலையைச் செய்தவர். அவர்கள் சிறிய தொகையே கமிசனாகக்   கொடுப்பார்கள். ஆனால் ஸாந்தா சாமியார் இவரை தனது அறக்கட்டளைத் தலைவ ராகவே நியமித்தார்.  இதற்கு நன்றிக்கடனாக அவர் வெளிநாட்டிலிருந்து சாமியாருக்கு ரூ.2 கோடி மதிப்பிலான கார் ஒன்றை இறக்குமதி செய்து கொடுத்தார்.


அந்த சொகுசு காரில்தான் ஸாந்தா சாமி யார் பூஜைகளுக்காக சென்று வந்துள்ளார். ஸாந்தா சாமியாரின் பணப் பரிவர்த்தனை தொடர்பான மொத்த கணக்கு வழக்குகளை யும் கமலக்கார ரெட்டிதான் கவனித்து வரு வதாகவும் சொல்லப்படுகிறது.


 இந்த நிலையில், சாமியார் தன்னைத் தேடிவரும் பக்தர்களிடம் “தங்கம் மற்றும் வைரம்  இறக்குமதி செய்யும் வணிகத்தில் பெங்களூருவில், எனக்குத் தெரிந்த முக் கியப் பிரமுகர் இருக்கிறார். அந்த வணிகத் தில் சேர்ந்தால் நீங்களும் கோடிகளில் புரள லாம்‘ என்று ஆசைவார்த்தை காட்டியுள்ளார்.


சாமியாரின் பேச்சை நம்பி ஆற்காடு பகுதியைச் சேர்ந்த பென்ஸ் பாண்டியன், ஹரீஸ்குமார் ஆகியோர் 10 லட்சம் ரூபாயும், சங்கர் என்பவர் 10 லட்சம் ரூபாயும் கொடுத் திருக்கிறார்கள். இவர்களைப்போலவே, வாலாஜாபேட்டை பகுதியைச் சேர்ந்த கேசவமூர்த்தி என்பவர் 45 லட்சம் ரூபாயை ஸாந்தா சாமியாரிடம் கொடுத்திருக்கிறார். இவ்வளவு பணத்தையும் பெற்றுக்கொண்ட சாமியார்,   சில மாதங்கள் கழித்து, "என்னு டைய பார்ட்னர் ஏமாற்றிவிட்டார். உங்களது பணத்தை எப்படியாவது புரட்டி நானே கொடுத்துவிடுகிறேன்" என்று கூறியுள்ளார்.


பணத்தை இழந்த நால்வரும் தொடர்ந்து இவரை நச்சரித்ததால் ஆத்திரமடைந்த சாமியார் தன்னுடைய அரசியல் பலத்தைக் காட்டி மிரட்டியிருக்கிறார்.


இதையடுத்து, பாதிக்கப்பட்ட நால்வரும் இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மயில்வாகனனைச் சந் தித்து  புகாரளித்தனர். அவர் உத்தரவின் பேரில், மோசடி மற்றும் நம்பிக்கைத் துரோகம் ஆகிய பிரிவுகளின்கீழ் ஆற்காடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகளும், வாலா ஜாபேட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என ஸாந்தா சாமியார்மீது நான்கு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.


இதையடுத்து, விசாரணை வளையத் துக்குள் கொண்டுவரப்பட்ட ஸாந்தா சாமி யாரைக்  கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அரக் கோணம் கிளைச்சிறையில் அடைத்திருக் கிறார்கள். ஸாந்தா சாமியாரின் மோசடிக்கு உடந்தையாக இருந்த பெங்களூருவைச் சேர்ந்த கமலக்கார ரெட்டி மற்றும் ஆற்காடுப் பகுதியைச் சேர்ந்த ஆசிரியை புனிதவள்ளி ஆகிய இருவரையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடிவருகிறார்கள்.


இது குறித்து, இராணிப்பேட்டை காவல் துறை அதிகாரி மயில்வாகனனிடம் கேட்ட போது, "ஸாந்தா சாமியார் இதுவரை 65,00,000 ரூபாய் மோசடி செய்தது கண்டறியப்பட்டிருக் கிறது. நான்கு பேர் மட்டுமே புகார் கொடுத் திருக்கும் நிலையில் மேலும் பலர் வரக்கூடும் என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது’’ என்றார்


இந்த நிலையில் இவரது முகநூல் பக்கத்தில் உள்ள நபர்களை ஆழம் பார்த்து அவர்களை பாலியல் ரீதியாக அழைப்பு விடுத்துள்ளார். சிலர் அவர் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப்பட்டு அவரது ஆசைக்கு இணங்கி உள்ளனர். தன்னிடம் வரும் பக் தர்களின் நடவடிக்கைகளைக் கவனித்து நீண்ட நாட்களுக்குப் பிறகு நன்றாக நட்பு டன் பழகி, அவர்கள் நம்பிக்கையானவர்கள் என்று தெரிந்த பிறகு பாலியல் இச்சை தொடர் பாக அவர்களிடம் பேசி மடக்கி உள்ளார்.


பெண்களை தனது ஆசிரமத்திற்கு அழைத்து வருவதற்காகவே இவருடன் பணியாற்றிய பெண் ஒருவரை நியமித்து அவருக்குப் பணமும் தொடர்ந்து கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது, தற்போது அந்தப்பெண்ணும் விசாரணை வளையத்தில் வந்துள்ளார்.


அரசியல்  தலைவர்கள்,  அரசியலில்  தன் னைப்  புரோக்கர் என்று சொல்லிக் கொண்ட சோ ராமசாமியின் வாரிசு எஸ். குருமூர்த்தி போன்றவர்களின் சந்திப்புகளும், தொடர்பு களும் இருந்திருக்கின்றன.


அந்த அரசியல் புள்ளிகளையும் விசா ரணை வளையத்துக்குள் கொண்டு வந்தால், வளைக்குள் வாழும் பாம்புகள் எத்தகை யவை என்பது வெளிச்சத்துக்கு வருமே!


 


Comments