நாகர்கோவில் குமரி தோழர் பழனி சங்கரநாராயணன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!


நாஞ்சில் பெரியார் பெருந் தொண்டர் பழனி சங்கரநாராயணன் அவர்கள் (வயது 55) நேற்று (15.11.2020) மாலை நாகர்கோவிலில் திடீரென்று காலமானார் என்ற செய்தி நமக்கு பேரதிர்ச்சியைத் தந்தது.


மறைந்த மானமிகு தோழர் பழனி சங்கரநாராயணன் அவர்கள் மாமனிதர் - மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ப.சங்கரநாராயணன் - அருணா ஆகியோரின் அன்பு மகன். முதுபெரும் அடிநாள் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு, தந்தை பெரியாரின் கொள்கைகளை நாஞ்சில் பகுதியில் பரப்பிடக் காரணமான வடிவீசுவரம் அய்யா பழனி வடிவேலு அவர்களது பெயரனும் ஆவார்!


‘விடுதலை' வாசகர் வட்டத் தலைவர் மறைந்த பழனி சங்கரநாராயணன் மூன்றாம் தலைமுறை சுயமரியாதைக் குடும்ப வீரர். (அந்நாள் பிரபல சுயமரியாதை இயக்க பெரியாரின் உற்ற தொண்டர் - தோழர் வழக்குரைஞர் ப.சிதம்பரம் அவர்களது நெருங்கிய உறவுக்காரர்கள்).


கழகப் பிரச்சாரத்திற்குப் பெரும் செயல் ஊக்கியான பழனி சங்கரநாராயணன் அவர்கள், தாத்தா, தந்தையைப் போலவே, இயக்கத்தையும், தலைமையையும் மிகவும் நேசித்த சிறந்த செயல் வீரர். அன்பும், அமைதியும், பண்பும் கொண்ட தோழர்.


அவரை இழந்து வாடும் அவரது அன்னையார் அருணா சங்கரன், துணைவியார் சுதா பழனி, மகள் சங்கரி, மருமகன் ரசல் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்!


மறைந்த கொள்கை வீரர் மானமிகு பழனி சங்கரநாராயணன் அவர்களுக்கு நமது வீர வணக்கம்!


 


கி.வீரமணி,


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


16.11.2020


Comments