நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை மீறல்

மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் கண்டனம்


சென்னை, நவ. 21- ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோதமாக நிலத்தடி நீர் எடுக்கும் நிறுவனங்கள் குறித்த விவகாரத்தில் நீதி மன்ற உத்தரவை மீறிய அம்மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் தண்ணீர் நிறுவனங்களுக்கு முழுமையாக சீல் வைக்காமல் போர்வெல் அமைந்துள்ள புகுதிக்கு மட்டும் சீல் வைக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.


இந்நிலையில் இந்த வழக்கு 20.11.2020 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சம்மந்தப்பட்ட தண்ணீர் நிறுவனங் கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட நிர்வாகம் ஒட்டுமொத்த நிறுவனத்துக்கும் சீல் வைத்துள்ளதால், தொழில் செய்ய முடியாத நிலைமைக்கு நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


நீதிமன்ற உத்தரவை மீறி ஈரோடு மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக செயல்படுவதா என நீதிபதிகள் கண்டனம் தெரி வித்தனர். இதனையடுத்து நீதிமன்ற உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்படும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சார்பில் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.


Comments