ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:



  • அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் - ஜோ பைடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது. பைடன் 238 வாக்காளர் குழு வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார். டிரம்ப் 214 வாக்குகள் பெற்றுள்ளார்.

  • அமெரிக்காவில் முஸ்லீம்கள் 69 சதவீதத்தினர் ஜோ பைடனுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • ரிபப்ளிக் டிவி இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி கைதுக்கு பாஜக தரப்பில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்ததற்கு, காங்கிரஸ் பதிலடியாக, ஸ்கொரோல் பத்திரிக்கை ஆசிரியர், உபியில் நடைபெறும் சம்பவங்கள் குறித்து செய்தி வெளியிட்டதற்கு கைது செய்யப்பட்டபோது அமைதியாக ஏன் இருந்தார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளது.

  • உ.பி. ஹத்ராஸ் பாலியல் மரணம் குறித்து, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் அரசின் நடவடிக்கைகள், வர்ண முறையிலான ஜாதீயத்தை நிலை நாட்டும் வகையில் உள்ளது என எழுத்தாளர், சமூக ஆர்வலர் காஞ்சா அய்லய்யா தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

  • 2016-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் ஆசிய அமெரிக்கர்களின் வாக்குகள் ஜனநாயகக்கட்சிக்கு ஆதரவாக 75.4 சதவீதத்தினர் வாக்களித்தனர். ஆனால் தற்போது இது 67 சதவீதமாக குறைந்துள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:



  • மகாராட்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டம் அலிபாக்கைச் சேர்ந்த கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வாய் நாயக்கும், அவரது தாயாரும் 2018இல் தற்கொலை செய்து கொண்ட வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை இயக்குநர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

  • பீகார் மாநிலத் தேர்தலில் மோடி - நிதிஷ்குமார் கூட்டணி, எலக்ட்ரானிக் வாக்கு இயந்திரமோ அல்லது மோடி வாக்கு இயந்திரமோ எதைப் பயன்படுத்தினாலும், மக்கள் கடும் கோபத் தில் உள்ளனர். தோல்வியைத் தான் அவர்களுக்கு பதிலாக தருவார்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்தல் பரப்புரையில் பேசினார்.


குடந்தை கருணா


5.11.2020


Comments