சிறையில் தோன்றிய செல்வங்கள்

* மணச்சநல்லூர் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த தோழியர் அஞ்சலை அம்மையார் நவம்பர் 26 ஆம் தேதி சட்ட எரிப்பு ஈடுபட்டு சிறை சென்றார். அவர்களுக்கு நவம்பர் 29ஆம் தேதி குழந்தை பிறந்தது.


* மயிலாடுதுறையை சேர்ந்த தோழர் கோவிந்தம்மாள் சட்ட எரிப்ப்பு போரில் ஈடுபட்டு வேலூர் சிறையில் இருந்தபோது 11.2.1958 அன்று அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது அக்குழந்தைக்கு சிறைச் செல்வி என்று பெயரிட்டார்கள்.(பெயரிட் டவர் சுசீலா அம்மையார்).


* இதுபோல் வேலூர் சிறைச்சாலையில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண் டிருந்த ருக்மாபாய் ராகவன் அவர்களுக்கு 26.2.1958 அன்று ஒரு ஆண் குழந்தை பிறந்தது அவருக்கு சிறை செல்வம் என்று பெயரிட்டனர். (பெயரிட்டவர் பட்டம்மாள் பாலசுந்தரம்).


Comments