'தினமணி' 'தினமலர்' ஆத்து அக்ரகாரப் பெண்கள் இந்த ஒன்றிற்கு மட்டும் பதில் சொன்னால் போதுமானதே!

'தினமணி'யும், 'தினமலரும்' மனு தர்மத்துக்கு வக்காலத்து வாங்கி பெண்களை விட்டே எழுத வைத் திருக்கும் கொடுமையை என்ன சொல்ல? 'மோகினி' அவதாரங்களை இன்னும் மறந்து தொலையவில்லையா இந்த மனுவாதிகள்?


இதைவிடப் பெண்களை இழிவுப் படுத்த முடியாது என்கிற அளவுக்குப் பெண்களைப் பற்றிப் "பச்சைப் பச்சையாக" எழுதுகிறது மனுதர்மம்.


பெண்களை விட்டு எழுத வைத்தால் மனுதர்மம் கூறும் அந்தப் பச்சைப் பச்சையானவற்றை எடுத்துக்காட்டி, நாகரிகம் கருதி  பதில் சொல்ல மாட்டார்கள் என்ற தந்திரமும், குயுத்தியும் தானே இதற்குக் காரணம்.


ஒன்று மட்டும் தெரிவித்துக் கொள் கிறோம். பார்ப்பனப் பெண்களையும் சேர்த்துதான் மனுதர்மம் கேவலப்படுத் துகிறது - அவர்களுக்கும் சேர்த்துதான் வாதாடுகிறோம்.


பெண்களைப் பச்சையாகப் பேசும் சுலோகங்களைத் தவிர்த்து விட்டு, அதே நேரத்தில், அந்தப் பச்சையைவிட மிக மோசமாக சித்தரிக்கும் ஒரே ஒரு சுலோகத்தை மட்டும் எடுத்துக்காட்டு கிறோம். அதற்கு மட்டும் 'தினமணி' 'தினமலர்' பெண் எழுத்தாளர்கள் பதில் சொன்னால் போதுமானது. அதற்கு மேலும் நாங்கள் அந்தப் பெண்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை.


மனுதர்மம் அத்தியாயம் 9 -சுலோகம் 17


"படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், பொய், துரோக சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார்"


இதற்கு மட்டும் 'தினமணி' 'தினமலர்' சம்பந்தப்பட்ட அக்ரகாரப் பெண்கள் பதில் சொன்னால் போதுமானதே!


Comments