வாக்குமூலம்

நான் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சிக்காரன்! இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதிக்கும் அதை உண்டாக்கிய மதத்துக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருக்கிறது. அரசியல் சட்டம் தமிழர் நலனுக்காக வகுக்கப்படவுமில்லை; அச்சட்டத்தைத் திருத்தக் கூடிய வசதி தமிழர்களுக்கு இல்லை. ஆதலால், என் எதிர்ப் பைக் காட்டிக் கொள்ளும் அறிகுறியாக இச்சட்டத்தைக் கொளுத்தினேன். இப்படிக் கொளுத்துவதற்கு எனக்கு உரிமை உண்டு. இதனால், எந்த உயிருக்கும் எந்தப் பொரு ளுக்கும் சேதமில்லை; ஆதலால், நான் குற்றவாளி அல்ல. இந்த நீதிமன்ற நடவடிக்கையில் நான் கலந்து கொள்ள விரும்பவில்லை. நான் எதிர் வழக்காட விரும்பவில்லை. நான் குற்றவாளி என்று கூறப்பட்டால் அதற்குரிய தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.


(விடுதலை அறிக்கை - 21.11.1957)


வழக்கு மன்றத்தில், கைது செய்யப்பட்ட தோழர்கள் ஒவ் வொருவரும் சொல்ல வேண்டி விடுதலை ஏட்டில் வெளியி டப்பட்ட வாக்குமூலம்.


Comments