இந்தியக்கடற்படை விமானம் விபத்து: விமானியைத் தேடும் பணி தீவிரம்

புதுடில்லி, நவ. 29- இந்திய கடற் படைக்கு சொந்தமான விமா னம், பயிற்சியின்போது விபத்தில் சிக்கியது. இதில் பயணம் செய்த ஒரு விமானி மீட்கப்பட்ட நிலை யில், மற்றொரு விமானியை தேடும் பணி நடைபெற்று வரு கிறது.


இதுகுறித்து இந்திய கடற் படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், நேற்று மாலை 5 மணி யளவில் கடற்படையைச் சேர்ந்த  மிக் -29 கே பயிற்சி விமானம் விபத்தை சந்தித்ததாக கூறியுள் ளது. அரபிக்கடல் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த போது திடீரென்று அது போர்க்கப்பலின் ரேடாரிலிருந்து காணாமல் போனது. இதனை அடுத்து அதை தேடும் பணியில் இறங்கிய போது அது விபத்திற்கு உள்ளானது தெரிந்தது. அதில் பயணம்  செய்த விமானியை தேடும் பணியை கடற்படை முடுக்கிவிட்டது. இதில்,  ஒரு விமானி பத்திரமாக மீட்கப் பட்டுள்ளார். காணாமல் போன மற்றொரு விமானியைத் தேடும் பணியில் கடற்படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.


Comments