ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • இந்தியாவில் வசிக்கும் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம் என்ற மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காஷ்மீரில் முழு அடைப்பு நடைபெற்றது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • தமிழ் நாடு அரசு நிறைவேற்றிய 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகளின் கருத்தும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • நாடாளுமன்றத்தில் விவாதிக்கமாலே வாக்கெடுப்பு நடத்துவது, அரசியல் கட்சித் தலைவர்கள் எந்த விசாரணையும் இன்றி பல மாதங்கள் சிறையில் வைப்பது, மாணவர்கள், பேராசி ரியர்கள், சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் மீது தேச விரோதச் செயல் என்று குற்றம் சாட்டுவது, முக்கிய அரசுத் துறைகளுக்கு தலைமை இல்லாமல் இருப்பது அல்லது காலியிடங்களாக வைத்திருப்பது இவை அனைத்தும் ஜனநாயகம் மெதுவாக உயிரிழக்கிறது என்று பொருள் என காங் கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் தனது கட்டுரையில் கூறியுள்ளார்.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • இந்தியாவின் மதசார்பின்மைக்கு, கடைப்பிடிப்பதிலும், கொள்கை அளவிலும் ஆபத்து வந்துள்ளது என காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கூறியுள்ளார்.

  • மதத்தின் பெயரால் பிரான்ஸ் நாட்டில் நடக்கும் வன் முறையைக் கண்டித்து நசீருதீன் ஷா, ஜாவத் அக்தார், பிரசாந்த் பூஷண் உள்ளிட்ட இந்தியர்கள் நூறு பேர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.


தி டெலிகிராப்:  • மக்களிடையே பகையையும், வெறுப்பையும் உருவாக்கும் தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களுக்கு பெரிய நிறுவனங் கள் எவையும் விளம்பரங்கள் தராதீர்கள் என்பதை வலியுறுத்தி, பணி ஓய்வு பெற்ற அரசுத்துறை உயர் அதிகாரிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  • இந்திய அரசு நடத்தும் இந்திய மாஸ் கம்யூனிகேசன் கழகத்திற்கு காந்தியாரை அவமதித்த அனில் சவுமித்ரா, ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கையில் பணியாற்றிய பிரமோத் குமார் சாய்னி ஆகியோர் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


குடந்தை கருணா


31.10.2020


Comments