பிணை வழங்குவதிலும் பாரபட்சம்!


மும்பை, நவ. 16  சிறையின் மோசமான சூழலிலும், மனிதத்தன்மை மிளிர்வதாக, நண்பர்களுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் 83 வயதான மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி.


மும்பை அருகிலுள்ள தலோஜா மத்தியச் சிறையில், பீமா கொரேகான் வன்முறை வழக்கில் தொடர்புடைய குற்றத்திற்காக அடைக்கப்பட்டுள்ள 83 வயதான மனித உரிமை செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, பார்க்கின்சன்ஸ் நோயால் அவதிப்படுவதால், அவரின் அன்றாட செயல்களை மேற்கொள்வதற்கே பிறரின் உதவி அவருக்குத் தேவைப்படுகிறது.


மனித உரிமை செயல்பாட்டா ளர்களான வரவரா ராவ் மற்றும் வெர்னான் கொன்சால்வ்ஸ் மற்றும் அருண் பெரைரா, அதே சிறையில் வேறு அறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுவாமியுடன், ஒரே அறையில் வேறு இரண்டு பேர் அடைக்கப்பட்டுள்ளனர்.


அவர்கள்தான், அவர் தனது உணவை உட்கொள் ளவே உதவு கின்றனர். அவருக்கு, கேட்கும் திறன் கிட் டத்தட்ட இல் லாமல் போய் விட்டது. தண்ணீர் டம்ளரைகூட அவரால் பயன்படுத்த முடியாத நிலை இருப்பதால், ஸ்ட்ரா பயன்படுத்துவதற்கு நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுத் தாக்கல் செய்துள்ளார். ஆனால், நவம்பர் 28 ஆம் தேதிதான் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.


இந்நிலையில்தான், உடனிருப்போர் உதவியுடன் இந்தக் கடிதத்தை தன் நண்பர்களுக்கு எழுதியுள்ளார். மாலை 5.30 மணிமுதல், காலை 6 மணிவரையும், பிற்பகல் 12 மணிமுதல் பிற்பகல் 3 மணிவரையும் தாங்கள் சிறைக்குள் அடைக்கப்படுவதாகவும், வெளியிலிருக்கும் நேரங்களில் நண்பர்களை சந்தித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


மோசடி வழக்கு மற்றும் தற் கொலைக்குத் தூண்டிய வழக்கில் கைதான வலதுசாரி ஆதரவு ஊடக வியலாளரும் பாஜகவின் ஊது குழலுமான அர்ணாப் கோஸ்வாமிக்கு மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழக்கை விசாரிக்க அவகாசம் கொடுத்த நிலையிலும் உச்சநீதிமன்றம் உடனடியாக அவரது பிணை மனுவை விசாரித்து பிணையில் விடுவித்தது,


ஆனால் சமூக செயற்பாட்டாளர்கள் அரசியல் கைதிகளாக உள்ளனர். வாரவார ராவ் மற்றும் ஸ்டான் சுவாமி போன்றோர் 80 வயது முதியவர்கள். இரக்கமில்லாமல் மத்திய அரசு இவர்களைச் சிறையில் அடைத்து வைத்திருக்கிறது, நீதிமன்றங்களும்  இவர்களுக்குப் பிணை வழங்கதொடர்ந்து மறுத்து வருகிறது.   நோய்வாய்ப்பட்ட வய தானவர்களை இப்படி சிறையில் அடைக்கப்பட்டிருப்பது, கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.


Comments