ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: • மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 26 சட்டமன்ற தொகுதிகளில், வாக்குப்பெட்டிகளை கைப்பற்றி துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.

 • பீகார் மாநிலத்தில் மூன்றாம் கட்டத் தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரச்சாரத்திற்கு சென்ற முதல்வர் நிதிஷ்குமார் மீது, வெங்காயத்தையும், உருளைக் கிழங்கையும் மக்கள் வீசி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

 • அமிதாப் பச்சன் நடத்தும் ‘கோன் பனேகா குரோர்பதி’ தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு கேள்வியில், பாபாசாகேப் 1927இல் எதை எதிர்த்தார் என்று கேட்கப்பட்டு, மனுஸ்மிரிதி என்று பதிலளிக்கப்பட்டது, ஹிந்து மக்களைப் புண்படுத்தியுள்ள தாகவும், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பாஜக எம்.எல்.ஏ. காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 • நியூசிலாந்து நாட்டின் அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண் பொறுப்பேற்பது, அந்த நாட்டில் நிலவும் பன்முகத் தன்மையை பிரதிபலிக்கிறது என தலையங்கத்தில் கூறப்பட்டு உள்ளது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை: • ஆன் லைன் ரம்மி சூதாட்டத்தின் காரணமாக இளைஞர் கள் தற்கொலை செய்து கொள்வதை கருத்தில் கொண்டு, ரம்மி விளம்பரத்தில் நடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் வீரட் கோலி, சவுரவ் கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், தமன்னா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 • மோடி அரசின் வேளாண் சட்டங்கள் தொடர்பாக குடியரசுத் தலைவர் தங்களைச் சந்திக்க மறுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப் முதல்வர் மற்றும் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் டில்லி ராஜ்காட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்து உள்ளனர்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்: • பீகாரைச் சேர்ந்த புலம் பெயர் தொழிலாளர்களுக்கு பிரதமர் மோடியும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரும் எந்த உதவியும் செய்யவில்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

 • பீகாரில் மண்டல் அரசியல், கீழ் நிலை ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசியல் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சியும், அதிகாரவர்க்கத்தில் பங்கும் கிடைக்கப் பெறவில்லை என பேராசிரியர் கிறிஸ்டபி ஜாப்ரலெட் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

 • உ.பி. அரசு கொண்டு வர உள்ள ‘லவ் ஜிகாத்’ எதிர்ப்பு சட்டம் அதாவது மத மறுப்பு திருமணத்திற்கு எதிரான சட்டம், பெண்களின் உரிமைக்கு எதிரானது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை குறித்த தமிழக அரசின் பரிந்துரை ஆளுநரின் முடிவுக்காக இரண்டு ஆண்டு களுக்கும் மேல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


தி டெலிகிராப்: • அரசு இயற்றிய சிறப்புத் திருமண சட்டம், இரு பாலரி டையே கருத்தொருமித்து, மதம், ஜாதியைத் தாண்டி திருமணம் செய்து கொள்ள வழிவகுத்துள்ளது. ஆனால், மோடியின் ஆட்சியில், லவ் ஜிகாத் என்ற பெயரில், அதற்கு எதிரான சட்டம் இயற்ற நினைக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட மதத்தினரை தாக்குவ தையும், பெண்களை ஒரு பொருளாகக் கருதுவதையும் தங் களது இரு நடவடிக்கைகளாக பாஜக எப்போதும் கருதுகிறது என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


குடந்தை கருணா


4.11.2020


Comments