மாட்டுக் கொட்டத்தில் அமைச்சரவைக் கூட்டம்: பசுக்களை பாதுகாக்க தனி அமைச்சகமாம்!


போபால், நவ.19 மத்தியப் பிரதேசத்தில் உள்ள கால் நடைகளை பாதுகாப்பதற்கு ‘பசு நல அமைச்சகம்’ உருவாக்கப்படும் என்று 2017-ஆம் ஆண்டே, பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் கூறியிருந்தார்.


இந்துக்களால் புனிதமாக கருதப்படும் பசுக்களை பாதுகாக்கவும், பசுக்கள் அண்டை நாடுகளுக்கு கடத்தப்படுவது மற்றும்  உணவுக்காக பசுக்கள் கொல்லப்படுவதை தடுப்பதற்கு இந்தநடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போது தெரிவித்தார்.


அதைத்தொடர்ந்து, போபால் நகருக்கு 190 கி.மீ. வடகிழக்கே அகர் மால்வா நகரில் உள்ள ‘காமதேனு கோ அபியாரண்யா’ என்னும் பசுக்கள் சரணாலயமும் அமைக்கப்பட்டது. சுமார்4 ஆயிரம் பசுக்கள் இங்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அவை சரிவர பராமரிக்கப்படாத நிலையில், மரணம் அடையும் நிகழ்வுகளும் நடந்தன.


இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தபடி, மத்தியப் பிரதேசஅரசு, தற்போது பசுக்கள் பாதுகாப்புக்கென தனி அமைச்சகத்தை உருவாக்கி உள்ளதாக சவுகான் அறிவித்துள்ளார்.


இந்த புதிய பசு அமைச்சகத்தில், கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து, ஊரக வளர்ச்சி, வீட்டுவசதி மற்றும் உழவர் நலத் துறைகள் ஒருஅங்கமாக இருக்கும் எனவும், கோபாஷ் டமியான நவம்பர் 22 அன்று, அகர் மால்வா மாவட்டம் சலரியாவில் உள்ள பசுக்கள் சரணாலயத்தில், பசு அமைச்சகத்தின் முதல் கூட்டம் நடைபெறும் என்றும் சவுகான் கூறியுள்ளார்.


Comments