அரசியல் சட்ட எரிப்பு ஏன்

அரசியல் சட்ட எரிப்பு ஏன்?தோழர்களே!


பிராமணன் என்றொரு ஜாதி சட்டத்தி லிருக்க அனுமதிக்க மாட்டோம். அப்படி இருந்தாலும், அவன் பிராமணனாக வாழ அனுமதிக்க மாட்டோம் என்று அரசாங் கம் சொல்லட்டும். இந்த மாதம் 26ஆம் தேதிக்குள் பிராமணன் என்று ஒரு ஜாதி கிடையாது. சட்டத்தில் அந்த மாதிரி கருத மாட்டோம் என்று அறிக்கை வரா விட்டால் அரசாங்க சட்டப் புத்தகத்தை நாங்கள் கொளுத்தப் போகிறோம். இதை நாங்கள் வருத்தத்துடனேயே சொல்கி றோம். வெறும் குறும்புக்காகவோ, விளம் பரத்திற்காகவோ, ஜெயிலுக்குப் போய் வந்ததைக் காட்டி ஓட்டு வேட்டையா டவோ நாங்கள் அந்தக் காரியம் செய்ய வில்லை.


எனக்கு 79 வயது ஆகிவிட்டது. நம் மக்களுக்கு ஏதாவது காரியம் செய்து விட்டுத்தான் சாக வேண்டும்; இல்லை யென்றால், நம் மக்களுக்கு உணர்ச்சி ஊட்டி விட்டுச் சாக வேண்டும்.


இன்றையதினம் எல்லாப் பார்ப்பனப் பத்திரிகைகளும் கட்டுப்பாடாக - நான் பார்ப்பனரை வெட்டச் சொன்னேன், குத்தச் சொன்னேன் என்று கூப்பாடு போடுகின்றனர். எந்தப் பார்ப்பானிடம் எனக்கு விரோதம்? யார் மீது துவேசம்? நேற்று எனக்கு நடைபெற்ற விழாவிற்கு பார்ப்பனர் பணம் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த செக் என்னிடம் இருக்கிறது. ஏன் இதை  சொல்லுகிறேன் என்றால், எனக்கு தனிப்பட்ட முறையில் யார் மீதும் துவேசம் இல்லை என்பதைக் காட்டவே!


நான் ஏன் ஒரு கூட்டமே ஒழிய வேண்டுமென்று சொல்லுகிறேன்? நம்  சமுதாயத்திற்கே  களை  மாதிரி இருந்து கொண்டு வளரவொட்டாமல் செய்கிறது அந்தக் கூட்டம். வெட்டுகிறேன் என்று சொன்னேன், குத்துகிறேன் என்று சொன் னேன் என்று பூச்சாண்டி காட்டுகின்றனர். அப்படிச் சொல்வதன்மூலம் அந்த நாளையே அவர்கள் விரைவு படுத்துகின்றனர்.


காந்தியார் படத்தை எரித்தால் தலை கள் உருளும், ரத்த ஆறு ஓடும். அதற்கு இருபதாயிரம் பேர் தயார் என்று சொன்னார்களே! அவர்களை நீ என்ன செய்தாய்? நான் சொல்லுகிறேன், ஜாதி ஒழியாவிட்டால் ரத்த ஆறு ஓடும், என்று. ஜாதி இருக்கத்தான் வேண்டுமென்று நீ சொல்லேன்!


இந்த மாதிரிக் கூப்பாடு போட்டால் அரசாங்கம் பிடித்து எங்களை ஜெயிலில் போடும். நாங்கள் பயந்து கொள்வோம் என்பது பார்ப்பனர்கள் நினைப்பு. இது யாரிடம் பலிக்கும்? நான்தான் உயிரை விடத் தயாராய் இருக்கிறேனே! என்னு டைய தொண்டர்களும் தயாராய் இருக் கிறார்களே! வேண்டுமானால், இந்தப் பார்ப்பன சமுதாயத்திற்கு நான் வாய்தா கொடுக்கிறேன், தன்னை அது மாற்றிக் கொள்ளட்டும்!


இன்றைய தினம் அரசாங்கத்திற்கு வாய்தா கொடுத்திருக்கிறேனே! ஜாதி ஒழிப்புக்குப் பரிகாரம் கிடைக்கா விட் டால் அரசியல் சட்டத்தைக் கொளுத்தப் போகிறோம். அதிலும் முடியாவிட்டால் காந்தியார் சிலையை உடைக்கப் போகி றோம். வேண்டுமானால் என்னை ஜெயி லில் போடட்டும்; வெளியே இருந்து கொண்டு, இந்தக் கொடுமையை சகித்துக் கொண்டிருக்க எங்களால் முடியாது.


இதற்கு முன்பே 1950லேயே நான் சொன்னேன், இது (அரசியல் சட்டம்) மனு தர்ம சாஸ்திரத்தின் மறுபதிப்பு. ஆகவே, இதைக் கொளுத்த வேண்டும் என்று!


சுவாமிமலையில் ஆற்றிய உரை “விடுதலை', 11.11.1957


இந்திய அரசியல் சட்டம் ஏன் எரிக்கப்பட வேண்டும்?


1. 1077 நாள் செலவு செய்து உருவாக்கிய இந்தச் சட்டத்தில் வெகு ஜாக்கிரதையாக பார்ப்பனர் (ஆரிய பிராமணர்) உயர்வும், பார்ப்பனரல்லாத மக்கள் (திராவிடர் - சூத்திரர்) இழிவும் சாஸ்திரப்படிக்கு கொண்ட இந்துமதத்தைக் காப்பது, மத உரிமை அளிப்பது, என்கிற தன்மையில் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்த தகுந் தப்படி பாதுகாப்புச் செய்து கொண்டார்கள்.


2. மேலும் சூத்திரர் என்று கூறப் படுகின்ற மக்களின் பிரதிநிதிகள் அறவே இல்லாமல் ஆறுபேர்களில் நான்கு பேர் பார்ப்பனர்களாகவே கொண்டு மற்றும் இருஇனத்தின் பிரதிநிதிகளுக்கும் கூட விலைக்கொடுத்து விட்டு செய்து கொண்டதுதான் இந்திய அரசியல் சட்டம் என்ற இந்த அரசியலமைப்பாகும்.


3. இந்த நாட்டு வாக்காளர்களின் உண்மையான பிரதிநிதிகளை கொண் டல்ல இந்தச் சட்டம் செய்யப்பட்டது. எவ்வாறெனில், 1946இல் நடைபெற்ற தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண சட்ட சபை அங்கத்தினர்களால் ஓட் செய்யப்பெற்று அரசியல் நிர்ணய சபை அங்கத்தினர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டார்கள். பிரிட்டிஷார் அளித்த இந்தியச் சுதந்திரச் சட்டமே 1947இல் தான் நமக்கு கிடைத்தது. நாடு இரண்டாக பிரிந்த பிற்பாடு எஞ்சியிருந்த உறுப்பினர் களால் மாகாணங்களிலிருந்து 235 பேர் களும், சமஸ்தானங்களிலிருந்து 72 பேர் களுமாக மொத்தம் 307 பேர்தான் அப் போது இருந்தார்கள். அப்பொது ஓட்டு ரிமை பெற்றிருந்த வாக்காளர்கள் எண் ணிக்கை இன்றைய வாக்காளர்களின் எண்ணிக்கையில் பனிரெண்டு சதவிகிதத் தினரேயாவர். எனவே, இது எப்படி மக் கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட தாகும்? நாடு சுதந்திரமடையாத காலத்தில் நடந்த எலெக்ஷன் பிரதிநிதிகளால் காங் கிரஸ் பார்ப்பன, பிரதிநிதிகளால் ஏற் படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நம்மை, அதாவது பார்ப்பன ஆதிக்கத்தினின்று விடுதலை பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கின்ற நம்மை எப்படிக் கட்டுப்படுத்தும்?


4. மற்றும் மொழி சம்பந்தமாகவும், வரி சம்பந்தமாகவும், பொருளாதார உரிமை சம்பந்தமாகவும், வெளிநாட்டார் சுரண்டு தல் சம்பந்தமாகவும், அதிகாரங்களை தங்களுக்கே வைத்துக்கொண்டு எந்த வகையிலும் மாற்றமுடியாத அளவுக்கு இரும்புக் கூட்டு பாதுகாப்பை இந்தச் சட்டத்தின் மூலம் பார்ப்பனர்களும் வட நாட்டார்களும் ஏற்படுத்திக் கொண்டுள் ளார்கள் அதிலிருந்து விடுபட ஆசைப்படு கிறோம் என்பதைக் காட்டுவதற்காகத் தான் அரசியல் சட்ட எரிப்பு என்பதாகும்.


- ஈ.வெ.ரா


"விடுதலை', 11.11.1957


Comments