தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு மறைந்தாரே! திராவிடர் கழகம் இரங்கல்


தமிழ்நாடு அரசின் வேளாண்துறை அமைச்சர் திரு. இரா. துரைக்கண்ணு அவர்கள் உடல் நலம் குன்றி, கடந்த 2 வாரங்களுக்கு மேல் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றிரவு (31.10.2020) 11 மணியளவில் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிக்கிறது.


எவரிடமும் மிகவும் அன்பாகவும், பிரியமாகப் பேசும் பண்பாளர்; அடக்கமாக எப்போதும் இருப்பார். அவரது தொகுதிப் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதெல்லாம் நம்மிடம் மிகுந்த அன்பு காட்டிய பெருமகனார்.


எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து தனது உழைப் பாலும், கொள்கை உணர்வாலும் உயர்ந்த நிலையடைந்து எல்லோராலும் மதிக்கப்பட்டவர்.


அவரது இழப்பினால் வாடி வருந்தும் அவரது குடும்பத் தினருக்கும், அவரது கட்சியான அ.இ.அ.தி.மு.க.வுக்கும் நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை       


1.11.2020           


Comments