தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டமா

தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டமா?


மேகதாது அணை கட்ட மத்திய அரசு துணை நிற்குமாம்: மத்திய அமைச்சர் உறுதி


மைசூரு, நவ.20 காவிரியின் குறுக்கே மேகதாது எனும் இடத்தில், ரூ. 9000 கோடி ரூபாக்கு புதிய அணை கட்டுவதற்கு கருநாடக அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெங்களூருக்கு குடிநீர் அளிக்கவும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் அம்மாநில அரசு முடிவு செய்திருக்கிறது.


கருநாடக மாநில முதல்வர் எடி யூரப்பா கடந்த ஆகஸ்டு மாதம் மைசூரில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் சிறப்பு வழிபாடு நடத் திய பிறகு செய்தியாளர்களிடம் பேசு கையில், மேகதாது அணை கட்டு வதற்கு மத்திய அரசிடம் இருந்து விரைவில் ஒப்புதல் பெறப்படும். கருநாடகாவின் பாசனப் பரப்பை அதிகரிப்பதுதான் தமது அரசின் இலட்சியம் என்றும் தெரிவித்தார்.


கடந்த செப்டம்பர் 15 இல் கரு நாடக நீர்ப்பாசனத் துறை அமைச் சர் ரமேஷ் ஜர்கி ஹோலி, மேகதாது பகுதியில் அணை அமைக்கப்பட உள்ள இடத்தை ஆய்வு செய்தார். அப்போது இத்திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு, கருநாடக முதல்வர் எடியூரப்பா தலைமையில் குழு அமைத்து, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை டில்லியில் சென்று சந்தித்து வலி யுறுத்துவோம். மத்திய அரசின் அனுமதியைப் பெற்று உடனடியாக மேகேதாட்டு அணை கட்டுமானப் பணிகளை தொடங்குவோம் என்று அறிவித்தார். அதன்படி பிரதமர் மோடி அவர்களை எடியூரப்பா செப்டம்பர் 18 ஆம் தேதி சந்தித்து, மேகேதாட்டு அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கிட மனு அளித்தார்


இதன்தொடர்ச்சியாக நவம்பர் 18 ஆம் நாள் கருநாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ரமேஷ் ஜர்கி ஹோலி டில்லியில், மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அவர்களை சந்தித்து, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும்என்று கோரிக்கைவிடுத் துள்ளார். அவரோடு கருநாடக மாநிலத்தைச் சேர்ந்த மத்திய நிலக் கரித் துறை மற்றும் நாடாளு மன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், நீர் வளத் துறை அமைச்சரிடம் மேகதாது அணைக்கு ஒப்புதல் தர வலியுறுத்தி இருக்கிறார்.


இவர்களின் சந்திப்புக்கு பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தனது டுவிட்டர் பதிவில், "கருநாடக மாநில நீர் திட்டங்களுக்கு மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். 9 ஆயி ரம் கோடி ரூபாய் செலவில் மேக தாதுவில் காவிரியின் குறுக்கே தடுப்பு அணைகட்ட திட்டமிட் டுள்ள கருநாடகா, இதன் மூலம் 67.16 டிஎம்சி நீரை சேமித்து வைத்து, பெங்களூரு நகர குடிநீர் தேவைக்கும்,அணை நீரைப்பயன் படுத்தி400மெகாவாட்நீர்மின் உற்பத்தித் திட்டத்தை நிறைவேற்ற வும் முனைந்துள்ளது.


'மேகதாதுவில் அணை கட்டி னால், காவிரி நீரை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும்  தமிழ்நாட்டின் 8 மாவட்டங்களில் விவசாயம் அறவே பாதிக்கப்படும்; தமிழகம் தண்ணீர் இல்லாமல் நிரந்தரமாக வறண்ட பூமியாக மாறிவிடும்.


 இது தொடர்பாக தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது.


சட்டமன்ற கூட்டத்தொடரில் மத்தியஅரசு மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று தமிழக முதல்வர் அறிவித்த நிலை யில் மத்திய அமைச்சர் கருநாடக நீர்வளத்துறை அமைச்சரிடம் மேக தாது அணை கட்ட உறுதுணை யாக நிற்போம் என்று உத்திரவாதம் கொடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


Comments