தென்மாவட்ட சுற்றுப் பயண விவரம்

தென் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்: தமிழர் தலைவரின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் - நூல் அறிமுக விழா - கருத்தரங்கம் - கவியரங்கம் - கொள்கை விழாவாகக் கொண்டாட முடிவு.


திராவிட மாணவர்களின் சந்திப்பு, விடுதலை சந்தா வழங்கல் தந்தை பெரியாரின் 142-ஆவது பிறந்தநாள் விழா கூட்டங்கள் மிகுந்த உற்சாகத்தோடு நடைபெற்றது. மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில அமைப்புச் செயலாளர் மதுரை. வே. செல்வம், மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர் இரா. செந்தூரபாண்டியன் ஆகியோர் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.


தூத்துக்குடி


22.10.2020 அன்று மாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மய்யத்தில் மாவட்ட திராவிடர் கழகச் செயலா ளர் மு.முனியசாமி தலைமையில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.


மண்டல கழகத் தலைவர் பால் இராஜேந்திரம், படிப்பக பொறுப்பாளர் இரா.காசி, மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் க.கதிரவன், புதுக்கோட்டை முருகன், தி.மு.க. மோ. அன்பழகன் ஆகியோர் விடுதலை சந்தாக்களை வழங்கி கருத்துரையாற்றினார்கள். கழகத்தில் இணைந்த மாண வர்களை வரவேற்று புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டது.


நாகர்கோயில்


23.10.2020 அன்று காலை 10.30 மணிக்கு கன்னியா குமரி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் நாகர்கோயில் பெரியார் மய்யத்தில் மாவட்ட திராவிடர் கழக தலைவர் எம்.எம்.சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன், மாவட்ட இளைஞரணி தலைவர் இரா. இராசேசு, இளைஞரணி செயலாளர் மு. சேகர், குளச்சல் செந்தமிழ் ஆகியோர் விடுதலை, உண்மை இதழ்களுக்கு சந்தா வழங்கினார்கள். கழகப் பொறுப்பாளர்கள் நல்ல பெருமாள், பிரான்சிஸ், சிவதானு ஆகியோர் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர். மாணவர் கழக புதிய அமைப்பு அறிவிக்கப்பட்டது.


நெல்லை


23.10.2020 அன்று பிற்பகல் 3 மணிக்கு திருநெல்வேலி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் தச்ச நல்லூர் கீர்த்தி மெட்டல் வணிக மய்யத்தில் மாவட்டத் தலைவர் இரா.காசி தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ச. இராசேந்திரன், மகளிரணி தலைவர் இரா.பானுமதி, மாநகரத் தலைவர் ரெத்தினசாமி மாவட்ட ப.க. தலைவர் இரா. வேல்முருகன், க.விசாலாட்சி, க. அசோக்குமார், கோ.ஆகாஷ், மருத்துவர் நெடுவாக்கோட்டை இரா.இராசாராம் ஆகியோர் விடு தலை, உண்மை இதழ்களுக்கு சந்தாக்கள் வழங்கினார் கள். புதிய மாணவர் கழக பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டது.


கீழப்பாவூர்


23.10.2020 அன்று தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மண்டல திராவிடர் கழக செயலாளர் அய். இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தென் மண்டல பிரச்சாரக்குழு செயலாளர் டேவிட் செல்லதுரை மண்டல மாணவர் கழக செயலாளர் அ.செந்தூரப் பாண்டியன், எம்.சுதன், பொதுக்குழு உறுப்பினர் பி. பொன்ராஜ் ஆகியோர் விடுதலை சந்தாக்கள் வழங்கி கருத்துரை ஆற்றினார்கள். திராவிட மாணவர்கழக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.


விருதுநகர்


24.10.2020 அன்று காலை 10.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாவட்ட திராவிடர் கழக செயலாளர் தி. ஆதவன் தலைமையில் நடைபெற்றது. மாநில ப.க. துணைத் தலைவர் க.நல்லதம்பி நகர அமைப்பாளர் நல்லவன், மாவட்ட இளைஞரணி தலைவர் ந.ஆசைத்தம்பி, பெரியார் பெருந்தொண்டர் முரளிதரன் ஆகியோர் விடுதலை சந்தாக்கள் வழங்கி கருத்துரையாற்றினர். மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப் பட்டது.


திருமங்கலம்


24.10.2020 அன்று மாலை 4 மணிக்கு மதுரை புறநகர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் திருமங்கலத்தில் மாவட்ட ப.க. செயலர் முத்துக்கருப்பன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட திரா விடர் கழக செயலாளர் எரிமலை தலைமை வகித்தார்.


மண்டல தலைவர் சிவகுருநாதன், பெரியார் பெருந் தொண்டர் நாகமுத்து, மாவட்ட ப.க. தலைவர் மன்னர் மன்னன் ஆகியோர் விடுதலை சந்தாக்களும், மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆசிரியர் செங்கதிர், மாவட்ட அமைப்பாளர் பால்ராசு ஆகியோர் விடுதலை வளர்ச்சி நிதியும் வழங்கி கருத்துரை ஆற்றினார்கள். நிறைவாக கழகச் சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் சிறப்புரை யாற்றினார். மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.


மதுரை மாவட்டம்


24.10.2020 அன்று மாலை 6.30 மணிக்கு மதுரை மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் எஸ்.ஏ. எஸ் பழக்கடையில் மாவட்ட செயலாளர் சுப.முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா. நேரு, மாவட்டத் தலைவர் அ.முருகானந்தம், மாவட்ட அமைப் பாளர் முனியசாமி, மண்டல தலைவர் சிவகுருநாதன், மண்டல செயலாளர் நா. முருகேசன், பெருந்தகையா ளர்கள் இராசாங்கம், மாரிமுத்து, பொறியாளர் இராமச் சந்திரன், அல்லிராணி, செல்லத்துரை, போட்டோ இராதா, பெரி.காளியப்பன் ஆகியோர் விடுதலை சந்தாக்கள் வழங்கி மகிழ்ந்தார்கள்.


மந்திரமா- தந்திரமா நிகழ்ச்சியாளர் சுப. பெரியார் பித்தன், விடுதலை சந்தா வழங்கி கழகத்தில் தன்னை இணைத்துக் கொள்ள கேட்டுக்கொண்டார். தோழர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர். வழக்குரைஞரணி மாநில பொறுப்பாளர் நா.கணேசன், மு.சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.


நிறைவாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாணவர் கழக புதிய பொறுப் பாளர்கள் அறிவிக்கப்பட்டது.


ஆண்டிப்பட்டி


25.10.2020 அன்று காலை 10.30 மணிக்கு தேனி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் ஆண்டிப்பட்டியில் மாவட்ட திராவிடர் கழக மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ஸ்டார் நா.ஜீவா, மாவட்ட கழக தலைவர் - போடி ச. இரகுநாதன் தலைமையில் நடைபெற்றது.


மாவட்ட துணைத் தலைவர் ஸ்டார் நாகராஜன், நகரத் தலைவர் செ.கண்ணன், நகர அமைப்பாளர் சுரேசு, மேனாள் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் ஆசையன், நகர் மன்றத் தலைவர் தி.மு.க இராமசாமி, தேசிய ஆதிதிராவிட மக்கள் சம்மேளனம், முத்து முருகேசன், மாவட்ட இளைஞரணி தலைவர் சுருளிராஜன், பொதுக்குழு உறுப்பினர் பெரியகுளம் மு. அன்புக் கரசன், மகளிரணி தலைவர் பேபி.சாந்தாதேவி ஆகி யோர் விடுதலை சந்தாக்கள் வழங்கி கருத்துரையாற்றி னார்கள். மாணவர்கழக புதிய நிர்வாகிகள் அறிவிக்கப் பட்டது.


பழனி


25.10.2020 அன்று மாலை 4.00 மணிக்கு பழனி மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் ஒட்டன்சத்திரம் அ.தில்ரேசு தலைமையில் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இரணியன், ஆசிரியர் அருண்குமார், படிப்பக பொறுப்பாளர் அங்கப்பன், மாவட்ட இளைஞரணி தலைவர் இராதாகிருட்டிணன், மாவட்ட ப.க.தலைவர் திராவிடச்செல்வன் ஆகியோர் கருத்துரை வழங்கினார் கள். வெற்றிச்செல்வன் விடுதலை, உண்மை இதழ் களுக்கு சந்தா வழங்கினார்.


புதிய மாணவர் கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.


திண்டுக்கல்


25.10.2020 அன்று இரவு 7.00 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம் மாவட்ட தலைவர் இரா.வீரபாண்டி தலைமையில் நடை பெற்றது. மண்டலச் செயலாளர் நாகராசன், மாவட்ட ப.க. செயலாளர் மு.செல்வம், மாவட்ட ப.க. அமைப்பாளர் காஞ்சிதுரை, நகர தலைவர் பழ. இராசேந்திரன், இரா. சுரேசு , செயப்பிரகாசு, மாவட்ட தி.க.துணைத்தலைவர் த.கருணாநிதி ஆகியோர் உண்மை, விடுதலை சந்தாக் கள் வழங்கினார்கள்.


தாடிக்கொம்பு மில் தொழிலாளர் கா.சதாசிவம் விடுதலை ஆயுள் சந்தா வழங்கினார். புதிய மாணவர் கழக நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டது.


தொகுப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன்,


மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்


Comments