வரலாறு படைத்த வாளாடி பெரியசாமிகள்

வழக்குரைஞர்  பூவை  புலிகேசிசட்ட எரிப்புப் போரில் இரண்டு ஆண்டு தண்டிக்கப்பட்டு தட்டப்பாறை சிறுவர் நிறையில் நோயுற்று பலி வாங்கப்பட்ட கீழ்வாளாடி இளம் வீரர் பெரியசாமியின் சடலத்துடன் அவரது தாயார் குழந்தையம்மாளும் தந்தை பெரியாரின் அன்னை மணியம்மையாரும் சோகத்துடன் அஞ்சலி செலுத்தும் காட்சி. 


மனிதன் மனிதனாக மதிக்கப்பட வேண்டும். மனித சமத்துவம் போற்றப்பட வேண்டும். ஒரு மனிதனுக்கு உள்ள உரிமை மற்ற மனிதனுக்கு மறுக்கப்படக் கூடாது என்ற இலட்சிய சமுதாயத்தினை நிர்மாணிக்க வாழ்நாள் போராளியாக வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர் தந்தை பெரியாரை, மகத்தான மானுடத் தலைவரை வெறும் கடவுள் மறுப்பாள ராகவும், இந்து மத எதிர்ப்பா ளராகவும், அவருடைய இயக்கமான திராவிடர் கழகத்தை இந்து மத எதிர்ப்பு இயக்க மாகவும் கட்டமைக்க உண் மையை  எப் பொழுதும் பேசுவதில்லை என்று உறுதி கொண்டுள்ள பார்ப்பன ஊடகங்கள் முயன்று வருகின்றன.


இத்தகைய பொய்ப் பிரச்சாரத்தினை நம்பும் இன்றைய இளைஞர்களும் தந்தை பெரியாரும், பெரியார் இயக்கமும் மனித சமத்துவத்திற்கு ஆற்றிய பணி என்ன? என்று அறியாமையில் வினவு கின்றனர்.


தந்தை பெரியார்,  தனது  இலட்சியமான மனித சமத்துவத்திற்குத் தடையாக, சமத் துவமின்மையை நியாயப்படுத்தும் பாது காப்பு அரணாக உள்ள கடவுள், மதத்தை மட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தை யும் விட்டுவைக்கவில்லை.


“ஒரு சட்டம் எல்லோருக்கும் சமம். சமவாய்ப்பு என்று சொல்லிக்கொண்டு பார்ப்பனருடைய உயர்வைக் காப்பாற்றி -_ அவர்களுடைய ஏகபோக அனுபவத் திற்குக் கல்வியையும், உத்தியோகத்தை யும் தருகிறதென்றால், அது எந்த வகை யில் நீதிமான நேர்மையான சட்டம்? இத் தகைய மோசடிச் சட்டம் ஒழிக்கப்பட்டே ஆக வேண்டும். அந்த முயற்சியாக, 26ஆம் தேதியன்று இந்தச் சட்டத்தைத் தீயிலிட்டுச் பொசுக்கப் போகிறோம்’’ என் றும் அறிவித்து ஜாதியைப் பாதுகாக்கும் சட்டத்தை எரிப்போம்.... எரிக்க வேண் டும் என்பதற்காக தஞ்சையில் 3.11.1957 அன்று சிறப்பு மாநாடு நடத்தி போராட்ட அறிவிப்பை வெளியிட்டடார்.


பெரியாரின் இலட்சியமே ஜாதி ஒழிக் கப்பட வேண்டும் என்பதுதான். ஜாதியை ஒழிப்பதற்காக ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தைக் கொளுத்த வேண்டும் என்ற பெரியாரின் ஆணையை ஏற்று பின் விளைவுகளைப் பற்றி கவ லைப் படாமல் பெரியாரின் கட்டளையை நிறை வேற்றுவது ஒன்றையே கடமை யாகக் கொண்ட தொண்டர்கள் எரித்துச் சாம் பலாக்கினார்கள்.


அந்த மாவீர்களின் வரிசையில்  வர லாறானவர்கள்தான் வாளாடி பெரியசாமிகள்.


திருச்சியிலிருந்து இலால்குடி செல் லும் சாலையில் உள்ளது கீழவாளாடி புதுத்தெரு என்பதொரு கிராமம். தாழ்த் தப்பட்டோர் மட்டுமே வசிக்கும் பகுதி. பெரியார் பெருந்தொண்டர் பெ.சங்கப் பிள்ளை தலைமையில் 47 பேர் சட்டத்தை எரித்துச் சிறைக்குச் சென்றனர். அவர் களில் ச.பெரியசாமி த/பெ. சப்பாணி என் பவர் குறைந்த வயது காரணமாக செங் கல்பட்டு சிறுவர் சிறையில் வைக்கப்பட்டு பின்னர் தூத்துக்குடி - தட்டப்பாறை சிறைக்கு மாற்றப்பட்டார். சட்ட எரிப்பிற் காக இரண்டாண்டு கடுங்காவல் தண் டனை விதிக்கப்பட்ட சிறுவன் பெரிய சாமி. வெய்யில் காலம் என்பதாலும், பழக்கமில்லாத புழுபுழுத்த சோளக்கஞ்சி இரண்டும் ஒத்துக்கொள்ளாததாலும்  வயிற் றுப் போக்கு ஏற்பட்டு போதிய மருத்துவ வசதி இல்லாததால் 22.12.1958அன்று  தன் 13ஆவது வயதில் இறந்துபோனார். அன் னாருக்கு அவரது ஊரான கீழ வாளாடி யில்  24.01.1961இல் தந்தை பெரியார் நினைவுச் சின்னம் திறந்தார். இன்றும் அந்த நினைவுச் சின்னம் ஜாதி வெறி பலிகொண்ட பெரியசாமியின் வரலாறாக காட்சியளிக்கிறது.


மேலும் அதே ஊரைச் சேர்ந்த மற் றொரு பெரியசாமி த/பெ. சன்னாசி சட் டத்தை எரித்து 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் இருந்தார். அவருக்கு வயது 17. அவர் குண்டாக இருந்ததால் அவ்வூர் மக்களால் ‘புல்கானின்’ என்கிற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டார். வேலூர் சிறைச்சாலைக்கு வருகை தந்த ஆளுநர் விஷ்ணுராம் மேதி சட்ட எரிப்பு கைதி களில் இளைஞராகக் காணப்பட்ட  பெரிய சாமியிடம் “உன்னை மன்னித்து விடு தலை செய்கிறேன். இனிமேல் இது போன்ற காரியம் செய்ய மாட்டாயல் லவா?’’ என்றார். மொழி பெயர்ப்பாளர் மூலம் இதனைப் புரிந்து கொண்ட  பெரியசாமி  “சட்ட  எரிப்பிற்கான காரணத்தை விளக்கி, என்னை வெளியிலே அனுப் பினால், என் தலைவர் பெரியார் சொன் னால் மீண்டும் சட்டத்தைக் கொளுத்து வேன்’’ என்று பதில் கூறினார். இந்தப் பதி லைக் கேட்ட ஆளுநர் மேதி அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்து பெரியசாமி யைத் தட்டிக் கொடுத்தார். அருகிலிருந்த அவ்வூர் போராளிகள் இதுகண்டு பெரு மிதம் கொண்டனர். பின்னர் தண்டனை முடிந்து விடுதலையாகி புல்கானின் என்கிற பெரியசாமி, இளஞ்சியம் என் பவரைத் திருமணம் செய்து கொண்டார். இளஞ்சியம் என்ற அம்மையார் இன்றும் கழக மகளிரணியில் இயங்கிக் கொண்டி ருக்கிறார். இவருக்கு உலகநாதன் என்ற மகனும், அங்குப்பொண்ணு, மஞ்சுளா என்ற இரு மகள்களும் உள்ளனர். ஜாதி ஒழிப்பிற்காக தம் இன்னுயிரையும், இளமையையும் தியாகம் செய்த வீரமற வர்கள் திராவிடர் கழகத்தைத் தவிர, பெரியார் தொண்டர்களைத் தவிர வேறு எங்கு உண்டு? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பை யாரால் ஈடுசெய்ய முடியும்? இதற்கெல்லாம் நாம் காட்ட வேண்டிய நன்றி என்பது தந்தை பெரியார் காண விரும்பிய ஜாதியற்ற சமத்துவ சமுதா யத்தை நிர்மாணிப்பதே.


வாழ்க வாளாடி பெரியசாமிகள்.


வரலாறு அவர்களைப் பேசட்டும்!


Comments