செய்தியும், சிந்தனையும்....!

ஊருக்கு இளைத்தது?


வட்டிக்கு வட்டி தள்ளுபடி வேளாண் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது.


அது எப்படி பொருந்தும்?


இந்துத்துவாவின்படி விவசாயம் 'பாவத் தொழில்' ஆயிற்றே?


1971 அய் திரும்பிப் பார்!


வேல் யாத்திரை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுக்கும்: - எல்.முருகன், தலைவர், தமிழக பா.ஜ.க.


வடக்கே ராமன் தெற்கே முருகன் என்ற யுக்தியா? 1971 அய்த் திரும்பிப் பார்க்கட்டும்.


பெரியார் சொன்னது...


சபரிமலை யாத்திரைக்கு கரோனா சான்று கட்டாயம்.


'கடவுளை மற - மனிதனை நினை' பெரியார் சொன்னது வென்றது.


யா(ர்)க்கர் மன்னன்


ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சேலம் ஆத்தூர் சின்னாளப்பட்டி என்னும் குக்கிராமத்தைச் சேர்ந்த நடராஜனுக்கு இடம்.


பூணூல் படைகளையும் தாண்டி யா(ர்)க்கர் மன்னராக ஜொலிப்பதால், நடராஜன்களைத் தவிர்க்க முடியவில்லையோ!


கடவுளுக்கே நாமம்!


இராமேசுவரம் கோவில் நகைகளில் எடை குறைப்பு கண்டுபிடிப்பு.


ஓ, நாமக்கடவுளுக்கே நாமமோ!.


திருப்பதி ''டாலர் மோசடி புகழ் சேஷாத்திரி!''யை என்ன செய்ய முடிந்தது?


பூணூலுக்கு விதிவிலக்கா?


'நீட்' தேர்வில் தாலி, மெட்டி, காதணிகள் அகற்றக் கூறும் நிபந்தனைகளை எதிர்க்கும் வழக்கிற்குப் பதில் அளிக்க வேண்டும்: - மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தாக்கீது.


ஒன்றைக் கவனித்தீர்களா?


பூணூலுக்கு மட்டும் விதிவிலக்கு - சிறையிலும் அப்படித்தானே!


Comments