தேசிய சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புச் சட்டம்

மூன்று ஆண்டு அல்ல முப்பது ஆண்டு ஆனாலும்...


சட்டமன்ற விவாதத்தில் அண்ணா உரைகாந்தியாரை வைத்துக்கொண்டு காங் கிரசுக் கட்சியார் தன் செல்வாக்கை அதிக மாக்கிக் கொண்டதன் காரணமாக - அன் றைக்கு அவர் உயிரைக் காப்பாற்ற முன் வராவிட்டாலும் - அவர் படத்தையாவது காப்பாற்றுவோம் என முன் வந்திருக்கிற வர்கள் ஓர் உண்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும். காந்தியின் படத்தைக் கொளுத் துவேன், அரசியல் சட்டத்தைக் கொளுத்து வேன் என்று பெரியார் சொன்னாரென்றால் அவருக்கு அவைகளின் பேரில் இருக்கிற வெறுப்பினால் அல்ல. தேசியக்கொடிக்கு, தேசியச் சட்டத்திற்கு இழுக்கை உண்டாக்க வேண்டும் என்கிற எண்ணத்தினால் அல்ல. இவைகளை எந்தக் காரணத்திற் காகக் கொளுத்தச் சொல்கிறேன், கிழிக்கச் சொல்கிறேன் என அவர் எடுத்துச் சொல்கிறாரோ அந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்குவதற்கு சர்க்கார் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக - அவர்களுடைய கவனத்தைக் கவர் வதற்காகச் சொல்லப்படுகிற விசயங்கள் தான். அவைகளின் பேரில் அவருக்கு வெறுப்பு இல்லை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அதை உணர்ந்து கொண்டு அவர் எந்தக் காரணங்களுக்காக உள்ளம் குமுறிக் கொண்டிருக்கிறாரோ அதை நிறைவேற்ற இவர்கள் ஏற்பாடு செய்தார்களா? அவைகளை செய்யாத வரையில் திரு.சங்கரன் சொன்னதுபோல மூன்றுக்குப் பக்கத்தில் சைபரைப்  போட்டு முப்பது ஆண்டுகள் சிறைதண்டனை என்றாலும் கூட இந்தச் சட்டத்தின் நோக்கம் நிறைவேறாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


சுதந்திரம் அடைந்து எட்டாண்டு  காலம் ஆன பிறகும் கூட ஜாதி ஒழிப்புக்கு நீங்கள் என்ன செய்தீர்கள் என்கிற கேள்வியின் அறிவிப்புத்தான்  பெரியாரின் செய்கை....


.....நீங்கள் சட்டத்தை நிறைவேற்றி விட்டாலும், ஆனால் 10ஆயிரம் பேர் அந்தச் சட்டத்தை மீறி, மூன்று ஆண்டு அல்ல முப்பது ஆண்டு ஆனாலும்  சிறையில் இருக்கத் தயங்க மாட்டார்கள். அமெரிக்க நாட்டிலோ, பிரான்சு நாட்டிலோ, ரஷ்ய நாட்டிலோ, ஒரு சமுதாயத்தை இப்படி யெல்லாம் அவர்கள் கருதமாட்டார்கள். இந்திய அரசியல் சட்டத்தில் எவ்வளவோ மாறுபட்ட கருத்துகள் உள்ளன. யார் தேசியத் தலைவர் என்று ஏற்றுக் கொள் வதிலே இன்னும் விவாதம் இருக்கிறது. சிறைக்குச் செல்பவர் 10 ஆயிரம் பேர் என்று அங்குள்ளவர்கள் கருதுவார்களே தவிர, அது நீங்கள் எதிர்பார்க்கிற கவுர வத்தைக் காப்பாற்றுவதாகாது. நான் உங்க ளைப் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன், பெரியார் அவர்கள் செயலுக்குப் பின்னால் இருக்கிற நோக்கத்தை தயவுசெய்து ஆராய்ந்து பாருங்கள். அந்த நோக்கத்தை வெளிப்படுத்துகிற பெரியாருடைய பழைய கால நடவடிக்கைகளை உங்க ளுக்கு ஏற்பட்ட தொடர்புகளையும் ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். பெரியார் ஓர் அதிர்ச்சி வைத்தியம் செய்கிறார். பெரியார் அவர்களை நீங்கள் பித்தம் பிடித்தவர் என்று கருதலாமே தவிர, உலகத்தில் பெரும் பகுதியினர் அவ்வாறு கருத வில்லை. உங்களுக்கு இருக்கிற அதிகாரப் பலத்தை வைத்துக் கொண்டு நீங்கள் சட்டத்தை நிறைவேற்றலாம். ஆனால், அது உங்களுடைய பலவீனத்தைக் காட்டுமே தவிர,  உண்மையான பலத்தைக் காட்டாது. மூன்று ஆண்டுகள் சட்டத்தை மீறியவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்க இந்திய அரசியல் சட்டத்தைக் கண்ணில் ஒத்திக் கொள்ள வேண்டுமென்று சொல்லுகிறார்கள். இந்திய அரசியல் சட்டத்தின் கர்த்தாவாகிய காலம் சென்ற டாக்டர் அம்பேத்கர் அவர்கள் வெளிப் படையாகச் சொன்னார். இந்த அரசியல் சட்டத்தில் பல்வேறு கோளாறுகள் இருக் கின்றன. இது எரிக்கத்தக்கது என்று நீர் தானே இந்தச் சட்டத்தை செய்தவர் என்று சிலர் அவரைக் கேட்க நீங்கள் சொல்லிச் செய்யப்பட்டதே தவிர ஏற்றுக் கொள்ள முடியாத, மனத்திற்கு ஒவ்வாத பல கருத் துக்கள் இருக்கின்றன என்று சொன்னார்கள்.


அரசியல் சட்டத்தில் இன்றைய தினம் உள்ள நாகநாட்டு நிலைமையைப் பற்றி நாளைக்கு ஒரு திருத்தம் கொண்டுவர இருக்கிறார்கள். இந்த 7ஆண்டுகளிலே அரசியல் சட்டத்தில் 10 தடவைகள் திருத் தங்கள் கொடுத்திருக்கிறார்கள்...


....பெரியார் ராமசாமி அவர்கள் காம ராஜ் அவர்களை எந்த வகையில் கருது கிறார்கள் என்பதை இன்று பார்த்தால் காமராஜ் ஓங்கி அடித்தாலும் காமராஜரின் கரம் வலிக்குமே என்றுதான் பெரியார் கருதுவார்....


...பெரியாரை ஒருகணம் சந்தித்து ஜாதி ஒழிப்புப்பற்றி இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கிறது, ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று அதில் சொல்லப்பட்டி ருக்கிறது, நீங்கள் அதைப் பாராமல் இருக் கிறீர்களே என்று எடுத்துச் சொல்லி, ஜாதி ஒழிப்பு என்பது தங்களுக்குள்ள பிரத்தி யேக உரிமையா, ஜாதி வேண்டுமென்று நாங்கள் சொல்கிறோமா, அது உங்களுக் குத் தெரியாதா, எங்கள் அமைச்சரவையில் ஜாதிக் கட்டுபாட்டை மீறி கலப்பு மணம் செய்து கொண்டவர்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் பெரியாரிடம் எடுத்துச் சொல்லி, அவரது முறையை மாற்றுவதுதான் ராஜதந்திரம் ஆகுமேயொழிய, எங்களுக்கு மெஜாரிட்டி இருக்கிறது என்று சொல்லி கட்சிப்பலத்தைக் கொண்டு சட்டம் போட்டுக் கொள்வதில் வியப்புமில்லை, அதில் யூகமுமில்லை. பலமுள்ள ஓர் அரசியல் கட்சி ராஜதந்திர முறையில் வெற்றி பெற்றார்கள் என்று உலகத்திற்கு நீங்கள் அறிவிக்க வேண்டும். ஆகவே பெரியாரை தயவுசெய்து சந்தியுங்கள். அவரது மனக்குமுறலை உணர்ந்து கொள் ளுங்கள். அவரது லட்சியமும் உங்களுக்கு உகந்ததுதான். ஆனால், அவரது முறை தவறு என்று நீங்கள் கருதுகிறீர்கள், நான் கருதுகிறேன். அங்ஙனம் கருதுகிற காரணத்தால்தான் நான் அதில் ஈடுபடாமல் இருக்கிறேன். முறை தவறு என்று கண்டிக் கும்போது தூய்மையான நோக்கத்தை ஆராய்ந்து பார்த்து அதை நீக்குவதற்கு உங்களுக்கு வழிவகை இருக்குமானால் ஏன் அந்த வாய்ப்பை நீங்கள் இழக்க வேண்டுமென்று நான் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். காமராஜ் - பெரியார் சந்திப்பு இப்பொழுது தேவையே அல்லாது, புதிய சட்டமல்ல. சட்டத்தை நிறைவேற்றி விடலாம். நிறைவேற்றவும் போகிறீர்கள், நிறைவேற்றத் துடித்துக் கொண்டிருக்கிறீர்கள். இதுவரை அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றாதது தவறு என்றும் ஆளும் கட்சியைச் சார்ந்த சில அங்கத்தினர்கள் கூறினார்கள். சட்டம் இயற்றுவதினால் மட்டும் நமது தேசிய கவுரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப் போவதில்லை....


...தேசியக் கொடி அவமதிக்கப்பட்டால் அதுதன் நெஞ்சில் புண்ணை ஏற்படுத்தும் என்று அமைச்சர் அவர்கள் கருதுவது போல், பெரியாரை அடக்குவதற்காக நீங் கள் கடுமையான சட்டம் கொண்டு வந்தால் மனம் புண்படுபவர்கள் இன்று தமிழகத்தில் லட்சக்கணக்கில் இருக்கிறார்கள் என்பதை அமைச்சரவை தயவுசெய்து தெரிந்து கொள்ள வேண்டுமென்று நான் பணி வன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்....


தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேசியசின்னங்கள்  அவமதிப்பு தடுப்புச் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அண்ணா அவர்கள் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்


Comments