'க்ரியா'வின் 'தற்காலத் தமிழ் அகராதி!' தொகுப்பாளர் எஸ். இராமகிருஷ்ணன் மறைந்தாரே!

கழகத் தலைவர் இரங்கல்தற்காலத் தமிழ் அகராதியைத் தொகுத்த அதன் தலைமையாளரான, 'க்ரியா' பதிப்பக உரிமையாளர் - பதிப்பகச் சாதனையாளர் திருவாளர் எஸ். இராமகிருஷ்ணன் (வயது 76) இன்று (17.11.2020) அதிகாலை காலமானார் என்ற செய்தி நமக்கு மிகப் பெரிய அதிர்ச்சி கலந்த சோகத்தைத் தந்தது!


மரணப் படுக்கையில் இருந்துகொண்டு 'தற்காலத் தமிழ் அகராதி'யின் மூன்றாம் பதிப்பைக் கொண்டு வர தமிழ்ப் பணி செய்த தகைமையாளர். அவர் நலமடைந்து வழக்கமான இலக்கியப் பணியைத் தொடருவார் என்ற நம் நம்பிக்கையை இயற்கையின் கோணல் புத்தி பறித்து விட்டது! படுக்கையில் அவர் ஓமாந்தூரார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு ஆளாகி  சிகிச்சை பெற்று வந்த நிலையில்  பணி செய்ததைப் பாராட்டி  மூன்று நாள்களுக்கு முன்பு எழுதி அது இன்று 'விடுதலை'யில் வெளிவரும் நிலையில் இச் செய்தி நமக்கு! (புதிய பதிப்பை நேற்று  நாம் வாங்கினோம்)


அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர்கள், பதிப்பகப் பணித் தோழர்கள் அனைவருக்கும் நமது ஆழ்ந்த இரங்கல்.


'தமிழுக்குத் தொண்டு செய்தோன்


சாவதில்லை' என்றார் புரட்சிக் கவிஞர்.


இன்றும், என்றும் தமிழ்கூறும் நல்லுலகின்


சிந்தனையில் அகராதிக் கருவூலமாக


வாழ்வார் அவர் என்பது உறுதி!


 


கி.வீரமணி


தலைவர்,


திராவிடர் கழகம்.


சென்னை


17.11.2020


Comments