காற்று மாசு அதிகரிப்பால் டில்லியை விட்டு வெளியேறினார் சோனியா


பனாஜி, நவ. 21- டில்லியில் சமீப நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகி றது.  இதேபோன்று காற்று மாசு அளவும் அதிகரித்து உள்ளது. 


காங்கிரஸ் கட்சியின் இடைக் க £ல தலைவர் சோனியா காந்தி டில்லியிலுள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இந்த ஆண்டு ஜூலை 30ஆம் தேதி சேர்க்கப்பட்டார். இதன்பின்பு கடந்த ஆகஸ் டில் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று சென்ற பின்னர், தீவிர மருத்துவ சிகிச்சைகள் அவருக்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வந்தன. கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கூட கலந்து கொள்ளாமல் அவ ரது மகன் ராகுல் காந்தியுடன் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றார்.


டில்லியில் ஏற்பட்ட காற்று மாசால் மார்பு தொற்று ஏற்பட்டு கடுமையாக அவர் அவதிப்பட்டு உள்ளார்.  இதனால், தலைநகர் டில்லி யில் வசித்து வந்த சோனியா காந்தியை, அவரது உடல்நலத் திற்காக ஒரு சில நாட்கள் நகரை விட்டு வெளியேறும் படி மருத்துவர்கள் அறிவு றுத்தி உள்ளனர். இதனை முன்னிட்டு சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோர் கோவா வுக்கு சென்றனர்.


 


Comments