திண்டுக்கல், ஆண்டிபட்டி, மயிலாடுதுறை பகுதிகளில் மாநில அமைப்பாளரிடம் 'விடுதலை' சந்தா வழங்கல்


திண்டுக்கல்லில் மண்டல திராவிடர்கழக செயலாளர் நாகராசன் ஒரு விடுதலை சந்தாவையும், மாவட்டத்தலைவர் இரா.வீரபாண்டி  'விடுதலை' சந்தாவையும்,  'உண்மை' சந்தாக்களையும், நகரத் தலைவர் பழ.இராசேந்திரன்  விடுதலை சந்தாவையும், மாவட்டத் துணைத் தலைவர் கருணாநிதி  விடுதலை சந்தாவையும்,  மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் காஞ்சிதுரை  விடுதலை சந்தாவையும், பெரியார்பெருந்தொண்டர் தாடிக்கொம்பு கா.சதாசிவம் விடுதலை ஆயுள் சந்தா ரூ.15.000/-த்தையும்,  அழகேசன்  விடுதலை சந்தாவையும், உண்மை சந்தா, புதிய பொறுப்பாளர்கள் . மாவட்ட இளைஞர் அணி செயலாளர் .பாண்டி, மாவட்ட இளைஞரணித் தலைவர் கார்த்திக் ஆகியோரும்,  உண்மை சந்தா, திண்டுக்கல் மாலட்ட மாணவர் கழக அமைப்பாளர் தமிழ்மாறன் மாநில திராவிடர்கழக அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர்.ஆண்டிபட்டியில் மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ஸ்டார் .நா.ஜீவா விடுதலை சந்தாவையும், திண்டுக்கல் மண்டலத் தலைவர் கருப்புச்சட்டைநடராசன் 4 விடுதலை சந்தாக்களையும், மேனாள் சட்டமன்ற திமுக உறுப்பினர் ஆசையன் விடுதலை சந்தாவையும், திமுக மேனாள் நகர் மன்றத் தலைவர் இராமசாமி விடுதலை சந்தாவையும்,  தேசிய தலித் மக்கள் சம்மேளனத் தலைவர் முத்து.முருகன் விடுதலை சந்தாவையும்,   கழக செயலாளர் சுரேசு விடுதலை சந்தாவையும்,  நகர திராவிடர் கழகத் தலைவர் செ.கண்ணன் பத்து விடுதலை சந்தாக்களையும், பொறியாளார் சுரேசு விடுதலை சந்தாவையும்,  மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடமும் அமைப்புச் செயலாளர் வே. செல்வத்திடமும் வழங்கினர்.கடவாசல் ஊராட்சி மன்றத் தலைவர் பாப்பாத்தி பன்னீர் ஒரு விடுதலை சந்தாவையும், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் செல்வம் ஒரு விடுதலை  சந்தாவை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட ப.க தலைவர் ஞானவள்ளுவன், கடவாசல் சந்திரசேகரன், அருள்தாஸ், ப.க நடராஜன்.  மயிலாடுதுறை மாவட்ட திக தலைவர் கடவாசல் குணசேகரன் வைத்தீசுவரன்கோயில் மருத்துவமனை நிருவாக உதவியாளர் சீ.சஞ்சீவியிடம் ஒரு விடுதலை சந்தா பெற்றார்.அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் முனைவர், பேரா. வெ.மாணிக்கவாசகம் விடுதலை சந்தா வினை மண்டல தலைவர் சாமி திராவிடமணியிடம்  வழங்கினார்.செய்யாறில் மண்டல. மாணவர் கழக செயலாளர் வெங்கடேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.சிவக்குமார் ஆகியோர் 2 விடுதலை சந்தாவையும்,  பொதுக்குழு உறுப்பினர் என்.வி.கோவிந்தன் மூன்று  விடுதலை, உண்மை சந்தாக்களையும், மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் வழங்கினர். உடன்: மாவட்ட தலைவர் இளங்கோ, செந்தூரபாண்டியன், வி. வெங்கட்ராமன் மற்றும் அனைத்துத் தோழர்கள் உள்ளனர்.திருவாரூர் நகர அ.ம.மு.க இளைஞர் பாசறை செயலாளர் சோ.இராஜகணேஷ் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினார். உடன்: மாவட்டத் தலைவர் வி.மோகன். மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன்.


Comments