பாகுபலி இயக்குநர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. பகிரங்க மிரட்டல்

மதவெறியின் உச்சம்!


அய்தராபாத்,நவ.5, பாகுபலி திரைப்பட இயக்குநர்  எஸ்.எஸ். ராஜமவுலி, புதிதாக இயக்கியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்.’ திரைப்படம், இந் துக்களின் உணர்வைப் புண்படுத் துவதாக உள்ளது என்றும், இந்த திரைப்படம் வெளியாகும் தியேட் டர்களைக் கொளுத்துவோம் என்றும் பாஜக மிரட் டல் விடுத்துள்ளது.


20-ஆம் நூற்றாண்டின் துவக் கத்தில், அய்தராபாத் நிஜாமிற்கு எதிரான தெலுங்கானா விடு தலைப் போராட்டத்தை முன் னெடுத்தவர்களில் கொமாரம் பீம், அல்லூரி சீதாராம ராஜூ ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களின் வரலாற்றை அடிப் படையாக கொண்டு, இயக்குநர் ராஜமவுலி  ஆர்.ஆர்.ஆர். (ரவுத் திரம்- ரணம்- ருத்திரம்) என்ற புதிய திரைப் படத்தை இயக்கி வருகிறார்.


ஜூனியர் என்.டி.ஆர்., ராம் சரண் தேஜா, அஜய்தேவ்கான், ஆலியா பட்உள்ளிட்டோர் நடித் துள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு உட்பட 10 மொழிகளில் தயாராகி வருகிறது. இதுவரை 40 சதவிகித படிப்பிடிப்பு நடந்து முடிந் துள்ளது.


2021 ஜனவரி 8 அன்று இந்தப் படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், படம் தொடர்பான முதற்கட்ட விளம்பரம் (teaser) அண்மையில் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது. ‘பாகு பலி’யைப் போலமற்றுமொரு பிரம்மாண்டம் என்று டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின் றனர். இந்நிலையில்தான், டீசரில் இடம் பெற்றுள்ள காட்சிகள், இந்துக்களின் உணர்வைப் புண் படுத்துவதாக கூறி வழக்கம்போல பாஜக சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. கொமாரம் பீம் ஒரு இந்து; ஆனால், இந்த கதாபாத் திரத்தில் நடித்திருக்கும் ஜூனியர் என்.டி.ஆர். தலையில் தொப்பி அணிந்து, கண்களில் சுர்மா, கழுத்தில் தாயத்து போட்டு இஸ் லாமியர் தோற்றத்தில் வருகிறார்; இது வரலாற்றைத் திரிக்கும் முயற்சி என கூப்பாடு போட் டுள்ளது.


குறிப்பாக, தெலுங்கானா மாநில பாஜக தலைவரும், கரீம்நகர் எம்.பி.யுமான சஞ்சய் குமார், “ஆர்.ஆர்.ஆர்.படம் வெளியாகும் அனைத்து தியேட் டர்களையும் தீ வைத்துக் கொளுத்துவோம்; இயக்குநர் ராஜமவுலியை தடிகொண்டு தாக்குவோம்” என்று பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.


கொமாரம் பீம், கோண்ட் பழங்குடி வகுப்பைச் சேர்ந்தவர் என்ற நிலையில், பழங்குடி மக்களின் உணர்வை புண் படுத்தினால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்று மற்றொரு பாஜக எம்.பி.யுமான சோயம் பாபு ராவ் மிரட்டி யுள்ளார். இதனிடையே, ராஜ மவுலியை மிரட்டும் பாஜக-வின ருக்கு தெலுங்கு திரையுலகத்தினர் கடும் கண்டனங்களை தெரி விக்கத் துவங்கியுள்ளனர்.இந்து - முஸ்லிம், கிறிஸ்தவர்களின் பிணைப்பை வெளிக்காட்டும் வகையிலான காட்சிகளை அமைப்பதை, இயக்குநர் ராஜ மவுலி, தனது முதல்திரைப்படம் துவங்கி பெரும்பாலான படங் களில் வழக்கமாக வைத்திருக் கிறார். இவற்றில், மகதீரா (தமிழில் ‘மாவீரன்’) படத்தில் வரும் ஷேர் கான்,சாலமன் கதா பாத்திரங்கள், பாகுபலிபடத்தில் வரும் அஸ்லம் கான் கதாபாத்திரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.


Comments