செய்தியும், சிந்தனையும்....!

வேலை போனால் என்ன?


இந்தியாவில் வேலையின்மை 6.98 விழுக்காடு அதிகரிப்பு.


ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என்று முழங்கினார் மோடி - இப்பொழுதோ இந்த நிலை!


ராமன் கோவில் கட்டப் போகிறார்களே - அது போதாதா?


கொடுக்கல் வாங்கல் பிசினஸ்


மக்களுக்குத் தீபாவளி பரிசு எதுவென்றால் விலைவாசி உயர்வும், பணவீக்கமும்தான். ஆனால், பி.ஜே.பி. தன்னுடைய முதலாளி நண்பர்களுக்குத் தீபாவளி பரிசாக ஆறு விமான நிலையங்களைப் பரிசாகக் கொடுத்துள்ளது: - பிரியங்கா காந்தி.


எல்லாம் கொடுக்கல் வாங்கல்தான் - கட்சி நிதியை கார்ப்பரேட்டுகள்தானே அள்ளிக் கொடுக்கிறார்கள்.


எச்சரிக்கை விளக்கு!


ஆந்திராவில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட மூன்றே நாள்களில்


200 ஆசிரியர்கள்,


15 மாணவர்களுக்குக் கரோனா.


தமிழ்நாடு அரசுக்கு எச்சரிக்கை இது!


விடுதலை செய்திடுக!


டில்லியில் பிரதமருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு.


28 ஆண்டுகளாக சிறையில் இருந்தவர்களை விடுதலை செய்யுங்கள் - ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என்ற இரண்டு தண்டனைகள் நியாயமல்ல!


ஆளுநர் பேசியிருப்பாரா?


மூன்றாம் உலகப் போரே வரும்!


30 ஆண்டுகளில் இந்தியாவின் 30 நகரங்களில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.


தண்ணீருக்காக மூன்றாவது உலகப் போரே வரும் என்று ஏற்கெனவே எச்சரிக்கப்பட்டுள்ளதே!


எதை மீறலாம் -


எதை மீறக்கூடாது?


கோவில் நிலங்களை பிற பயன்பாட்டுக்கு மாற்றக் கூடாது: - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


ஆமாம், அதேநேரத்தில் அரசு நிலங்களில் ஆக்கிரமித்து கோவில்கள் கட்டலாம் - உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மீறலாம் என்பது எழுதப்படாத உத்தரவு.


தமிழ் என்றால் இளக்காரமா?


தொலைநிலைக் கல்வியில் தமிழ் படித்துப் பட்டம் பெற்றவர்கள் - தமிழ் வழி படித்து இட ஒதுக்கீடு பெறும் சலுகையின்கீழ் வரமாட்டார்கள்.


ஓ, அப்படியா? தொலைநிலைப் படிப்பு தேவையில்லை என்று அரசு முடிவுக்கு வரவேண்டியதுதானே!


Comments