ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்ற உள்ளது போல், மகாராஷ்டிராவில் ‘லவ் ஜிகாத்’ சட்டம் நிறைவேற்றும் எண்ணம் இல்லை. பீகாரில் நிதிஷ்குமார் அரசு சட்டம் கொண்டு வந்ததற்குப் பின்னர் அது பற்றி பேசலாம் என சிவசேனா கட்சியின் தலைவர் சஞ்சய் ராவுட் கூறியுள்ளார்.

  • கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கேரள அரசு கொண்டு வந்த சைபர் குற்றங்களுக்கு எதிரான அவசர சட்டத்தை வாபஸ் பெறுவதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்து உள்ளார்.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • இந்தியன் வங்கியில் பியூன் உள்ளிட்ட கடை நிலை ஊழியர்கள் நியமனத்திற்கான விதிகளை இயற்றி, அரசு கெஜட்டில் வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் இந்தியன் வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • கரோனா தொற்று தற்போது அதிகரித்து வரும் நிலையில், பொறியியல் படிப்புக்கான ஜே.இ.இ. தேர்வினை ஜனவரிக்கு பதிலாக பிப்ரவரி மாதம் நடத்திட மத்திய அரசின் கல்வித்துறை அதிகாரிகள் முடிவெடுக்க உள்ளனர்.


தி இந்து:  • மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை யில் இட ஒதுக்கீட்டை ஒழித்திடும் எண்ணம் மோடி அரசுக்கு உள்ளதா? என்பது குறித்து தெளிவுபடுத்திட வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிபிஅய்-எம் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கடிதம் எழுதியுள்ளார்.


தி டெலிகிராப்:  • வங்கிகளை கார்ப்பரேட்டு நிறுவனங்கள் நிர்வகிக்க அனுமதிக்கலாம் என்ற ரிசர்வ் வங்கியின் பரிந்துரைக்கு, ரிசர்வ் வங்கியின் மேனாள் கவர்னர்கள் ரகுராம் ராஜன், விரால் ஆச்சார்யா ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

  • கரோனா தடுப்பு நடவடிக்கைகளில், குஜராத் அரசு சரிவர செயல்படவில்லை என உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.


குடந்தை கருணா


24.11.2020


Comments