இந்திய அரசமைப்புச் சட்ட எரிப்பு! ஈட்டிகள் மூட்டியத் தீ!

வரலாறு காணாத வரலாறு


ழகரன்அனைவருக்கும் அனைத்தும் என்னும் உயரிய கோட்பாட்டுடன் தொடங்கி மாபெரும் சமூகப் புரட்சியை உருவாக்கிய சமத்துவ பேரியக்கம் தந்தை பெரியாரின் இயக்கம்.ஜாதி ஒழிப்பு என்பது அதன் அடிநாதமாய் ஒலித்து வருகிறது.அத்த கைய உயரிய கொள்கைக்குத் திராவிடர் கழகம் கொடுத்த விலை உலகில் வேறு எந்த இயக்கமும் கொடுத்திருக்க முடியாது.


ஆங்கிலேயர் ஆட்சியிலேயே ஜாதி என்னும் சமூகக் கொடுமையை ஒழிக்க முயற்சித்த பெரியார், இந்தியா விடுதலை பெற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னரும் ஜாதி இருப்பதை எப்படியேனும் ஒழித்தாக வேண்டும் என்னும் வேகத்தில் செயல்பட்டு வந்தார். இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் அந்த ஜாதி பாதுகாக்கப்படுவது குறித்து கொதித்தெழுந்தார்


ஜாதி ஒழிய, தெளிவான பரிகாரமோ விளக்கமோ இன்று முதல் 15 நாள் வாய் தாவுக்குள் இந்த அரசாங்கம் மக்களுக்கு அளிக்காவிட்டால், இந்திய அரசியல் சட்டத்தை எதிர்த்து ஒழிக்கும் முயற்சியின் அறிகுறியாக, 1957 நவம்பர் 26ஆம் தேதி அன்று மாலையில், இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரல்லாத திராவிட ராலும் இச்சட்டம் நெருப்பி லிட்டுக் கொளுத்தத்தக்கது என்று இம்மாநாடு பொதுமக்களுக்குத் தெரிவித்துக் கொள் கிறது. (விடுதலை - 05.11.1957) என்கிற புரட் சிகரமான ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.


பெரியார் அவர்கள் முடிவுரையாகப் பேசுகையில், 10 ஆயிரம் பேராவது கையெ ழுத் திட்டுத் தர வேண்டும். அரசியல் சட் டத்தைக் கொளுத்தினால், இன்ன தண் டனை என்று கிரிமினல் சட்டத்திலோ அல்லது இந்த அரசியல் சட்டத்திலேயோ எதுவும் இல்லை. ஆனால், சும்மா இருக்க மாட்டார்கள்! அக்கிரமமாக, வேறு ஏதாவது சட்டத்தைப் பயன்படுத்துவார்கள். அதற் குத் தயாராகவே இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்கள் - (விடுதலை 05.11.1957)


பெரியார் அவர்கள் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் செய்ய முடிவு செய் ததை அடுத்து அதற்கு எதிர் நடவடிக்கை யாக 6.11.1957 அன்று சென்னை சட்டப் பேரவையில், காவல்துறை அமைச்சர் ஒரு மசோதா கொண்டு வந்து அதனைத் தாக்கல் செய்தார். மசோதாவின் நோக்கம், இந்திய தேசியத்தின் கவுரவச் சின்னங்களுக்கு இழைக்கப்படும் அவமானச் செயல்களை ஒடுக்குவது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மசோதா, தேசிய சின்னங்கள் அவமதிப்புத் தடுப்பு மசோதா - 1957 எனப்பட்டது.


அன்றைய நாளே நவம்பர் 26ஆம் தேதி அரசியல் சட்டம் கட்டாயம் கொளுத்தப் படும். நம் இழிநிலையையும் மத்திய அர சாங்கத்தின் - பார்ப்பனரின் கொடுமைகளை யும் பொறுக்க முடியாது என்று பெரியார் சென்னையில் விளக்கம் தந்தார். (விடுதலை 11.11.1957)


இதன்பின், பெரியார் தொடர் வண்டி மூலம் தமிழ்நாட்டின் முக்கிய பகுதிகளுக் குச் சுற்றுப் பயணம் செய்து சட்ட எரிப்பு பற்றி விளக்கம் தர முற்பட்டார். 11.11.1957இல் சென்னையிலிருந்து புறப்பட்டு, 12.11.1957 இல் தஞ்சையிலும், அங்கிருந்து தொடர் பயணம் செய்து, திருவாரூர், பேரளம், காரைக்குடி, திருச்சி, ஈரோடு எனத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யத் திட்ட மிடப்பட்டது. 24.11.1957இல் குடந்தையிலும், 25.11.1957 சீரங்கத்திலும், 26.11.1957 சென்னை யிலும் பொதுக் கூட்டங்களில் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.


சட்டத்தை நிறைவேற்றிவிட்டதன் மூலம் அரசாங்கத்தினர் ஜாதியைக் காப்பாற்றித்தான் தீர வேண்டும் என நமக்கு சவால் விட்டிருக்கின்றனர். இந்தச் சவா லுக்கு நீங்கள் சட்டம் கொளுத்தாவிட்டால் மனிதர்கள்தானா?


சட்டம் கொளுத்தி, சாம்பலை, சட்டம் செய்த மந்திரிக்கு அனுப்பிக் கொடுங்கள்! சட்டம் கொளுத்தின மக்கள் இந்த நாட்டில் இருக்கிறார்கள் என்பதை அதன்மூலம் கொஞ்சமாவது தெரிந்து கொள்ளட்டும்! என்று 14.11.1957 நாளிட்ட விடுதலை நாளி தழில் பெரியார் அறிவிப்புக் கொடுத்தார்.


இதற்கிடையில், குளித்தலை, பசுபதி பாளையம், திருச்சி ஆகிய இடங்களில் பேசிய பேச்சுகள் வன்முறையைத் தூண்டு வதாகக்  காரணம் காட்டி, 6.11.1957 மாலை திருச்சியில் திருச்சிக் காவல் துறையினரால் பெரியார் அவர்கள் கைது செய்யப்பட்டு, மாவட்ட மாஜிஸ்திரேட் திரு.வேணுகோபா லாச்சாரி முன் கொண்டு வரப்பட்டு, இ.பீ.கோ.117, 323, 324, 326, 436, 302 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டிருப் பதாக அறிவித்தார்கள். பின்னர் நவம்பர் 15, 19, 20 தேதிகளில் விசாரிக்கப்பட்டு, பெரியார் அவர்கள் பார்ப்பனருக்கு எதி ராக, தீயிடுதல், கொலை செய்தல் போன்ற காரியங்களைச் செய்யத் தூண்டினார் என்று குற்றப்பத்திரிகை வாசித்து செசன்ஸ் கோர்ட்டுக்கு கமிட் செய்தனர். 25.11.1957 அன்று செஷன்ஸ் கோர்ட்டுக்கு வரச் சொல்லி, சிறைவைக்க வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் வாதாடினார். நீண்ட விவாதத்திற்குப் பிறகு பெரியார் அவர்கள் சொந்த முச்சலிக்காவில் கையெழுத்து போடச் சொல்லி நீதிபதி வெளியில் இருக்க அனுமதித்தார்.


ஜாதி ஒழிப்புக்கு, பெரியார் கொடுத்த 15 நாள் கெடு 18.11.1957 அன்று முடிவடைந்தது. எந்தப் பயனும் இல்லாததால் நவம்பர் 26இல் சட்டம் கொளுத்தும் போராட்டம் உறுதி செய்யப்பட்டு விட்டது. 26.11.1957 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் அச்சடிக்கப்பட்ட தாள் கட்டினை எரிக்க நாடு முழுவதும் தோழர்கள் பெயர்கள் பட்டியல் தந்து போராட்டத்திற்கு ஆவலாக அணியமாயிருந்தனர்.


பெரியார் அவர்கள், 25.11.1957இல் சீரங்கம் பொதுக் கூட்டத்தை முடித்துக் கொண்டு விரைவுத் தொடர் வண்டி  மூலம், சென்னைக்கு வந்து நவம்பர் 26இல் சென்னையில் எழும்பூர் பெரியார் திடல் (டிராம் ஷெட்) கூட்டத்தில் பேசி இறுதியில், அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத் தத் திட்டமிட்டிருந்தார்கள்.


இந்நிலையில், 25.11.1957 மாலை பெரியார் அவர்கள், அவரது புத்தூர் மாளி கையிலிருந்து சீரங்கம் பொதுக்கூட்டம் பேசப் புறப்பட்டு ஆயத்தப்படுகையில், திருச்சி காவல் துறைக் கண்காணிப்பாளர் (சூபரின்டென்ட்) திரு.எஸ். சோலையப்பன் அவர்கள் பெரியார் மாளிகை வந்து மாலை 6.40 மணிக்கு பெரியார் அவர்களைக் கைது செய்தார். கிரிமினல் புரோசீஜர் கோடு 151ஆவது பிரிவின்படி (குற்றங்களைத் தடை செய்தலுக்கான சட்டப் பிரிவு) உத் தேசிக்கப்பட்ட நவம்பர் 26ஆம் நாள் அர சியல் சட்டப் புத்தகத்தைக் கொளுத்துவ தைத் தடுப்பதற்காக, கைது செய்வதாகக் கூறி, கைது செய்து தமது உந்து வண்டி (car)யில் அழைத்துச் சென்றார். பின், கூடுதல் முதல் வகுப்பு நீதிபதி (Additional I class Magistrate)  திரு.இராமச்சந்திரன் அவர்கள் முன்பாக, பெரியார் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டு 3 நாள் ரிமாண்டில் வைக் கும்படி உத்தரவிட்டார். பெரியார் அவர்கள் திருச்சி மத்திய சிறையில் வைக்கப்பட்டார். டிசம்பர் 9 வரை ரிமாண்டில் வைக்கும்படி அரசு தரப்பில் வைத்த கோரிக்கை நிரா கரிக்கப்பட்டு, 3 நாள் ரிமாண்டில் வைக் கப்பட்டு நிபந்தனையின் பேரில் வெளியில் இருக்க, பெரியார் அனுமதிக்கப்பட்டார்.


திராவிடர் கழகம் செய்த தீர்மானத்திற் கிணங்கவும், பெரியார் அவர்களின் ஆணைக்கு இணங்கவும் ஜாதி ஒழிப்புக் கிளர்ச்சியின் முதல் கட்டப் போராட்டமாகத் துவக்கப்பட்ட அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் தமிழ் நாடெங்கும்   26.11.1957 அன்று  நடந்தேறியது. சென்னை முதல் குமரி வரை சுமார் 10 ஆயிரம் பேர் கொளுத்தினர். திராவிடர் கழக முதன் மையான பெருமக்கள், தொண்டர்கள் உட்பட 3000 பேர்களுக்கு மேலாக சட்ட எரிப்புக்காகக் கைது செய்யப்பட்டனர். இது தவிர, பெரியார் அவர்களின் அறிவிப்பின் படி கழகத் தோழர்கள் அவரவர் வீடுகளில் மேற்படி சட்டப் புத்தகத்தைக் கொளுத்தி அதன் சாம்பலை, காவல்துறை அமைச்சர் திரு.பக்தவத்சலம் அவர்களுக்கு உறையுள் வைத்து நூற்றுக்கணக்கில் அனுப்பி வைத்தனர்.


இப்போராட்டத்தில் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், ஏராளமான தாய் மார்கள் கைக்குழந்தைகளுடன் சட்டத் தைக் கொளுத்தி கைது ஆகியிருந்ததே யாகும். தமிழ்நாடு அரசினர் செய்து வைத் துள்ள தேசிய கவுரவ அவமதிப்புத் தடுப்புத் சட்டத்தின் கீழ், சட்டப் புத்தகத்தை கொளுத்த முயன்றவர்கள் அல்லது கொளுத்தியவர்கள் மீதுதான் காவல் துறை யினர் வழக்குத் தொடர்வார்கள் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடைசியாக வந்த டிசம்பர் 3ஆம் நாள் தகவல்களின்படி, திருச்சி மத்திய சிறையில் மட்டும் சட்ட எரிப்பில் கைதான வீரர்கள் 1940 பேர் இருந்தனர். நாடு முழுதும் சுமார் 4000 பேர் சிறையில் இருந்தனர்.


வழக்கு மன்றத்தில், கைது செய்யப்பட்ட தோழர்கள் ஒவ்வொருவரும் சொல்ல வேண்டிய வாக்குமூலம் விடுதலை ஏட்டில் வருமாறு வெளியிடப்பட்டது.


அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் பங்கு பெற்றுக் கைதாகிச் சிறை புகுந்த வர்கள் பற்றிநினைத்தாலே நெகிழ்ச்சி ஏற் படுகிறது. நிறைமாதக் கர்ப்பிணிகள்; 70 வயது தாண்டிய முதியவர்கள்; 18 வயது நிரம்பாத சிறார்கள்; கைக்குழந்தையோடு தாய்மார்கள்; கண் பார்வை இல்லாத தோழர் கள்; ஒரு கால் முடமாகி, கட்டையூன்றித் தத்திச் செல்லும் உடல் ஊனமுற்றோர்; அன் றாடம் பிழைப்புக்கே அல்லாடும் ஏழையர் என்ற பல நிலையிலும் இருந்த கழகத் தோழர்கள் கைதாகிச் சிறை சென்றனர். திருச்சியில் தோழர் பிரான்சிஸ், பழநி ஆகி யோர் கை விலங்கு பூட்டப்பட்டு நடு வீதி யில் சிறைக்கு இழுத்துச் செல்லப் பட்டனர்.


1957இல் சிறை என்பது கொடுமை மிகுந்தது. சிறைச் சீர்திருத்தங்கள், கைதி களின் உரிமை எனும் சிந்தனைகளே உரு வாகிடாத காலம். கருஞ்சட்டைத் தோழர் கள் அரசியல் கைதிகள் போல் நடத்தப் பெறாமல், மோசமான குற்றங்கள் செய்த கிரிமினல் குற்றவாளிகள்போலவே நடத்தப் பெற்ற கொடுமையான காலம் அது. அரைக் கால், அரைக்கைச் சட்டை, சட்டையில் வில்லை, குல்லா என அவமதிப்பு. தோட்ட வேலை, சமையல் கூடத்தில் பாத்திரம் கழுவும் வேலை, அதிகாரிகளுக்குப் பணி விடை என மனிதநேயமற்ற முறையில் மனித நேயமே இல்லாமல் நடத்திய கொடுமை, பெரும் கொடுமை.


அரசியல் சட்ட எரிப்புப் போராட்டத்தில் சட்டப் புத்தகத்தை எரித்துக் கைதான தோழர்களுக்கு, பல்வேறு நாள்களில் நீதி மன்ற விசாரணை செய்யப்பட்டு பல்வேறு அளவில் சிறைத் தண்டனைகள் வழங்கப் பட்டன. 2 மாதம் முதல் 1 ஆண்டு வரை கடுங்காவல் தண்டனைகள் விதிக்கப் பட்ட னர். இதற்கு இடையில், திருச்சி சப் ஜெயி லிலும், வேலூர் சிறையிலும் கைதாகிக் காவலில் இருந்த தோழர்களைப் பெரியார், அன்னை மணியம்மையார் மற்றும் தோழர் களுடன் சென்று சந்தித்து உரையாடினர்.


இந்நிலையில், தமிழநாட்டில் திராவிடர் கழகத்தின் அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் பற்றி 29.11.1957இல் டில்லியில் உள்ள நிருபர்கள் பிரதமர் நேருவிடம் கேட்டதற்கு, அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது காட்டுமிராண்டித்தனம் என்றும் நாகரிக சமுதாயம் இதைப் பொறுத் துக் கொண்டிருக்காது என்றும் பதிலளித் தார். (விடுதலை - 29.11.1957)


5.12.1957 மாலை 4 மணியளவில் திருச்சி மத்திய சிறையில் சென்று பார்த்த பெரியார் அவர்கள், தோழர்களிடம், நான் வெளியில் இருந்து கொண்டு உங்களுக்குச்  சமாதா னம் சொல்வது என்பது எனக்கு வெட்க மாகத்தான் இருக்கிறது. 12ஆம் தேதி என் மீதுள்ள வழக்கு முடிந்து உங்களுடன் இருக்கும் நிலை ஏற்படும் என்று கருதுகி றேன். நானும் உங்களுடன் வந்து விட்டால் எல்லாம் சரியாகி விடும். எனக்கும் திருப்தி-யாயிருக்கும்! என்று பேசினார் - (விடுதலை: 6.12.1957)


ஏற்கெனவே தெரிவித்தபடி பெரியார் மீதான வழக்கு 12.12.1957 அன்று செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அன்று நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் பெரியார் அவர்கள் ஒரு வாக்குமூலம் தாக்கல் செய்தார். அந்த வாக்குமூலத்தின் சுருக்கம் பின்வருமாறு:


இந்த ஆட்சி பார்ப்பனப் பாதகர்களின் கொடுமையான காட்டுமிராண்டி ஆட்சி. இந்த ஆட்சியில் நீதி கிடைக்காது. 9.12.1957இல் பார்ப்பனப் பிரதமர் நேரு திருச்சி வந்து பார்ப்பனர்களைக் கொல்ல வேண்டும் என்று சொன்னவர்களை விடக் கூடாது. சிறையில் தள்ள வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இந்த வழக்கில் ஆதா ரமாக எனது பேச்சுகள் கொடுக்கப்பட்டு உள்ளன.


எனதுபேச்சு அப்படியே வார்த்தை களாக எ ழு த ப் ப ட வி ல்  ல . அங்கொன்றும் இங்கொன்றுமாக சொற்களையும் வாக்கி யங்களையும் கொண்டு கோர்த்துத் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. என் கருத்து கொலை செய்தல் என்ற பொரு ளைத் தராது. கொலை செய்வது என்றாலும், ஏன்? எதற்காக? எப்படி? எப்போது? என்ப தையும் குறிப்புக் காட்டவில்லை. நான் கட்டளை தந்த பிறகுதான் இந்த நிலை வந்து சேரும் என்ற உத்தேசக் கருத்தில் அச் சொற்கள் உச்சரிக்கப்பட்டதாகவே காணப் படுகிறதா? உடனடியாகச் செய்யும் படி கட்டளையிடப்பட்டிருக்கிறதா? என்று நடுநிலையோடு சிந்திக்க வேண்டும். நீதி பதியவர்கள் தங்களின் விருப்பப்படி செய் யலாம் என்ன தண்டனையாக இருந்தாலும் என் இலட்சியம் நிறைவேற நான் கொடுக்க வேண்டிய விலையாகக் கருதி ஏற்றுக் கொள்கிறேன்! (விடுதலை: 13.12.1957)


பெரியார் அவர்களின் மீது சாட்டப்பட்ட வழக்கில் முடிவு 14.12.1957 பகல் 12 மணி அளவில் செஷன்ஸ் நீதிபதி. திரு.சிவ சுப்பிரமணிய நாடார் அவர்களால் அறிவிக் கப்பட்டது. குற்றப்பிரிவுகள் மூன்றின் அடிப்படையில் ஒவ்வொன்றுக்கும் 6 மாதம் வீதம் ஒன்றரை ஆண்டுக்காலம் தண்டனை  விதிக்கப்பட்டு, இத்தண்டனை களை ஏக காலத்தில் அனுபவிக்கும் படியும் ஏ (ஹ) வகுப்பில் வைக்கும்படியும் பெரியார் அவர்களுக்குத் தீர்ப்பு வழங்கப்பட்டது. பெரியார் அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை அறிந்த தமிழகம் கொந்த ளித்தது. நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடைபெற்றன. திருச்சி சிறையிலிருந்த பெரியார் அவர்கள் சென்னைச் சிறையில் தனிக் கொட்டடியில் வைத்து அடைக்கப் பட்டார். உதவி-ஒத்தாசைக்குக்கூட எவ ரும் இல்லை.


சட்ட எரிப்புப் போராட்ட வீரர்கள் தண்டனை பெற்றுச் சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளாக நடத்தப்படவில்லை. சமூகக் குற்றவாளிகள் போல நடத்தப்பட்ட னர். கைதி உடை அணிந்தனர். கடும் வேலைகள் செய்தனர். சிறையும் விடுத லையும் பெரியார் 80 வயதில் சிறைத்தண் டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட தைக் கண்டித்து நாடெங்கும் கண்டனக் கூட்டங்கள் நடந்தன. பெரியார் நடத்திய இந்திய அரசியல் சட்ட எரிப்புப் போராட்டம் தமிழகத்தை மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் திகைப் பையும் ஏற்படுத்திவிட்டது. 1958 மே 5ஆம் நாள் சென்னை மத்திய சிறைச்சாலையி லிருந்து பெரியார் விடுதலையானார்.


Comments