மன்னிப்பு கேட்காத மறவர்

கலைஞர் அவர்கள் திராவிடர் கழகத் தில் பணியாற்றிய போது அவர்தம் நெருங் கிய தோழர்களாக விளங்கிய திரு வாரூரின் உறுதிமிக்கப் பெரியார் தொண்டர்களான  சிவசங்கரன், முத்துக்கிருட்டிணன் ஆகி யோர் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடு பட்டு சிறைச் சென்றனர்,  இருவரின் வாழ்விணை யர்கள் வெவ்வேறு காலங் களில் நோய் வாய்ப்பட்ட போது, பரோலில் வெளியே வருவது கோழைத்தனம் என்று பரோல் கேட்க மறுத்தனர். சிறையில் இவர்கள் இருக்கையி லேயே சிவசங்கரன் அவர்களின் வாழ்விணையர் மரணத்தைத் தழுவ, அப்போதும் கூட இறுதிச் சடங்கில் பங்கேற்கச் செல்லவில்லை. உயிரோடு இருக்கும்போதே பார்க்கவில்லை, பிணத் தைப் போய்ப் பார்த்து என்னவாகப் போகி றது என்று சிறையில் கண்ணீர்விட்டவாறே அன்றைய சிறைப்பணிகளைப் பார்க்கப் போய்விட் டனர்.


Comments