ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • அய்தராபாத் மாநகராட்சி தேர்தலுக்குப் பிறகு, தெலுங் கானா மாநில முதல்வரும், டி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான கே.சந்திரசேகர ராவ், அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்தித்து, பாஜகவின் ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட கோஷங்களுக்கு எதிரான ஒரு அரசியல் கூட்டமைப்பை உருவாக்கிட திட்டமிட்டுள்ளார்.

  • திருமணம் தனி நபர் சுதந்திரம். லவ் ஜிகாத் என்ற பெயரில் சமூகத்தில் பிளவை உண்டாக்க பாஜக உற்பத்தி செய்த ஒரு வார்த்தை என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கேலாட் கூறியுள்ளார்.

  • ஒடிசா மா நிலத்தில் வறுமையில் உள்ள ஒரு விவசாயிக்கு, ரூ.10 கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கிக்கான நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது. தனது ஆதார் கார்டைப் பயன்படுத்தி சிலர் மோசடி செய்துள்ளதாக காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

  • அரசமைப்புச் சட்டப் பிரிவு 32, தனி நபர் சுதந்திரத்தைக் காப்பதற்காக உருவாக்கப்பட்டது குறித்து அரசியல் நிர்ணய சபையில் சிறப்பான விவாதங்கள் நடைபெற்றுள்ளன. தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, அப்பிரிவின் அடிப்படையில் மக்கள் நீதிமன்ற நாடுவதை தடுக்கும் நோக்கில் கருத்து கூறியது ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதும் கூட என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • ஆன் லைன் சூதாட்டத்திற்கு தமிழ் நாடு அரசு தடை விதித்துள்ளது. மீறினால் ரூ.5000 அபராதக் கட்டணம் மற்றும் ஆறு மாத சிறை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • இந்தி மொழி பேசாத மற்றும் ஆங்கில வழிக் கல்வி படிக்காத மாணவர்களும் மத்திய அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில் அந்தந்த மாநில மொழியில் தேர்வு எழுதிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

  • தமிழ் நாட்டில் அரசுப்பள்ளியில் படித்து 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் வறுமைச் சூழலை கருத்தில் கொண்டு, அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட நடிகர்கள், அந்த மாணவர்களின் படிப்புக்கான நிதியினை அளித்து ஊக்கப்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் என்.கிருபாகரன் மற்றும் பி.புகழேந்தி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தி இந்து:  • பீகார் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக, ரூ.280 கோடியளவில் தேர்தல் நிதி பத்திரங்கள் விற்கப்பட்டதாக, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த தகவல் கிடைத்துள்ளது.


தி டெலிகிராப்:  • கொரொனா தொற்றுக்கு முன்பாகவே, பண மதிப்பிழப்பு காரணமாக பொருளாதாரம் மந்த நிலையில் இருந்தது. பிரத மரின் நிர்வாக இயலாமையால் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து உள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.


குடந்தை கருணா


21.11.2020


Comments