ஏழை மாணவர்கள் கல்வி கட்டணத்தை அரசு ஏற்கவேண்டும்

உயர்நீதிமன்றக் கிளை நீதிபதிகள் வேண்டுகோள்


மதுரை,நவ.21திமுகவைச்சேர்ந்த நெல்லை மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவர் கிரகாம் பெல், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு விவரம் வருமாறு:


தனியார்மருத்துவக் கல்லூரி களுக்கான கல்வி கட்டணம் கடந்த ஆண்டைப்போலவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில பிரிவுகளுக்கான கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. தற்போதுஅரசுப்பள்ளிமாண வர்களுக்கு7.5சதவீதஉள்இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள தால், அரசுப் பள்ளி மாண வர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத் துள்ளது.


ஆனால் தனியார் கல் லூரிகளுக்கான கட்டணத்தை பலரால் செலுத்த முடியாத நிலை உள்ளது. கட்டணம் செலுத்த முடியாமல் சிலர் மருத்துவ படிப்பை கைவிடும் நிலையும் உருவாகியுள்ளது. எனவே, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்வி கட்டணத்தை ரத்து செய்தும், குறைவாகவும் நிர் ணயம் செய்யுமாறு உத்தரவிட வேண்டும்.


இவ்வாறு மனுவில் கூறி யிருந்தார்.


இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் என்.கிரு பாகரன், பி.புகழேந்தி ஆகி யோர், ‘‘தனியார் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்த ஒரு அரசுப்பள்ளி மாணவரின் கல்வி கட்டணத்தை ஒரு மூத்த வழக்குரைஞர் ஏற்றுள்ளார். பலசிரமங்களுக்குபிறகே அரசுப்பள்ளியில் பயின்றவர் களுக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. ஆனா லும், கட்டணம் செலுத்த முடியாமல் பாதியிலேயே படிப்பை கைவிடும் நிலை ஏற்படுவது என்பது மிகுந்த வலியைத் தருகிறது. அரசு நல்ல நோக்கத்துடன் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளது. எனவே, ஏழை மாணவர்கள் பாதிப்பதை தவிர்க்க அரசு மற்றும் பிரபலங்களும், மூத்த வழக்குரைஞர்களும் ஒவ்வொரு மாணவரை தத்தெடுத்து கட் டணத்தை செலுத்த வேண் டும்’’என்றனர்.பின்னர்,தனி யார்சுயநிதிமருத்துவகல் லூரிகளின் கட்டண நிர்ணயக் குழு தலைவர், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத் துவக்கல்வி இயக்குநர் மற்றும் செயலாளர்ஆகியோர்பதில ளிக்க உத்தரவிட்டு விசார ணையை தள்ளி வைத்தனர்.


Comments