பாஜக  தோற்கடிக்க முடியாத கட்சி என்று யார் கூறியது

பாஜக  தோற்கடிக்க முடியாத கட்சி என்று யார் கூறியது? : ப. சிதம்பரம் கேள்வி



சென்னை நவ 4 பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? அது முடியும் என்பதை எதிர்க் கட்சிகள் நம்ப வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.


நரேந்திர மோடி தலைமையில் 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது. இதேபோல இந்தியாவில் பல மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. தற்போது பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் - ஆர்.ஜேடி-காங் கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. பாஜக கூட்டணிக்கு ஆதரவாக  மோடியும், காங்கிரஸ் கூட்ட ணிக்கு ஆதரவாக ராகுல் காந்தியும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் பீகார் சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை தோற்கடிக்க முடியும் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2019 நாடா ளுமன்றத் தேர்தலில் பாஜக வேட் பாளர்கள் சட்டப்பேரவையின் மொத்தமுள்ள 381 தொகுதிகளில் 319 தொகுதிகளில் வெற்றி பெற் றனர். ஆனால், அதற்கு முன்பு 2015இல் 330 தொகுதிகளுக்கு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் களிலும், 51 தொகுதிகளில் நடை பெற்ற இடைதேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் மொத்த முள்ள இதே இடங்களில் 163-ல் மட்டுமே வெற்றி பெற்றனர்.


எனவே, பாஜகவைத் தோற்கடிக்க முடியாது என்று யார் சொன்னது? அது முடியும் என்பதை எதிர்கட்சிகள் நம்ப வேண்டும். இது பீகாரில் நடக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்


Comments