பிரதமர் அலுவலகத்தில் முறையிட்டும் நீதி கிடைக்கவில்லை; அர்னாப் கைதால் இப்போதுதான் ஆறுதல் அடைகிறோம்


மும்பை, நவ.6 கட்டட உள்வடி வமைப்பாளர் அன்வாய் நாயக்-கை (வயது 53)தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில், இந்துத்துவா பேர்வழி அர்னாப் கோஸ்வாமி, புதன்கிழமையன்று காலை மும்பை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.


அவரை, 14 நாட்கள் காவலில் வைக்குமாறு, அலிபாக் நீதிமன்றம்உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரின் இந்த கைதுக்கு, மத்திய அமைச்சர்கள், அமித்ஷா, பிரகாஷ் ஜவடேகர், ஜெய்சங்கர், ஸ்மிருதி இரானி உள்ளிட்ட பாஜகதலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டது. இந்த நாட்டின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிகைத்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும், எமர்ஜென்சியை நினைவுபடுத்துவதாகவும் தொடர்ந்து கூப்பாடு போட்டு வருகின்றனர்.


ஆனால், அர்னாப் கைது செய்யப் பட்டதை தாங்கள் வரவேற்பதாகவும், இப்போதுதான் சற்று ஆறுதலாக இருப்பதாகவும், தற்கொலை செய்து கொண்ட அன்வாய் நாயக்கின் மனைவி அக்‌ஷதா நாயக், மகள் அதன்யா நாயக் ஆகியோர் பேட்டி அளித்துள்ளனர். “தற்கொலை செய்துகொண்ட எனது கணவர், ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி உட்பட (பெரோஸ் ஷேக், நிதேஷ் சர்தா ஆகியோர் ஏனைய இருவர்) மூன்று நபர்களின் பெயர்களை தனது கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நாங்கள் நீதிக்காக நீண்ட காலம் காத்திருந்தோம். இன்று மகாராட்டிரா காவல்துறையினர் அவரைக் கைது செய்திருக்கிறார்கள். அதற்காக நான் அவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். தற்போது எங்களுக்கு நீதி கிடைக்கும்என்று நம்புகிறேன். கோஸ்வாமியிடமிருந்து எனது கணவர் ரூ. 83 லட்சம்பணத்தைப் பெற்றிருந்தால் அவர் இன்று உயிரோடு இருந்திருப்பார்” என்று அன்வாய் நாயக்கின் மனைவி அக்‌ஷதா நாயக் கூறியுள்ளார்.


“எங்களுக்கு வாழ உரிமை இல்லையா அல்லது அர்னாப் கோஸ்வாமிக்கு மட்டுமே வாழ உரிமை இருக்கிறதா?'' என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல அன்வாய் நாயக் கின் மகள் அதன்யா நாயக் பேசுகையில், “ரிபப்ளிக் டிவி, எனது தந்தைக்கு ரூ. 83 லட்சம் செலுத்தவில்லை. என் தந்தை அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினார். ஆனால்பதில் கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் என் தந்தை தொடர்ந்து அச்சுறுத்தப் பட்டதால், அவர் தற் கொலை செய்து கொண்டார். அப்போது அர்னாப்பைக் கைதுசெய்யக் கோரி, நாங்கள் அரசின்ஒவ்வொரு துறையையும் நாடினோம். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை. மாறாக, எங்களை வீடுபுகுந்து மிரட்டினார்கள். எங்கள்தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப்பட்டன. எனது வாழ்க் கையையும் அழித்து விடுவதாக அவர்கள் மிரட்டினார்கள்.


நாங்கள் நமது நாட்டின் பிரத மர் அலுவலகம், சைபர் செல் துறை,பொருளாதார அலுவலக பிரிவு ஆகிய முக்கியமான இடங்களுக்கு, எங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகுறித்து கடிதம் எழுதினோம். ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை. அர்னாப் செல்வாக்குமிக்கவர் என்பதால், வழக்கு முடக்கப்பட்டது. இன்று, நாங்கள் மக்களிடமிருந்து ஆதரவைப் பெறுகிறோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


Comments