அமெரிக்க மக்களின் முடிவை மதிக்கிறோம் ஜோ பைடன், கமலா ஹாரிசுக்கு சீனா வாழ்த்து

பெய்ஜிங், நவ.15 அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜன நாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கு சீனா  வாழ்த்துத் தெரிவித்துள்ளது.


இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், ''அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் அமெரிக்க மக்களின் தேர்வை மதிக்கிறோம். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சட்டத்துக்கு உட்பட்டே உறுதி செய்யப்படும் என்று நாங்கள் புரிந்துகொள்கிறோம்'' என்று தெரிவித்துள்ளது.


Comments