தமிழகத்தில் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் முடக்கம்


சென்னை, நவ. 17- தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாது காப்பு ஆணையம் 2013ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இந்தஆணையம் தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை கொண்டதாக இயங்கி வருகிறது. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தை அமல்படுத்துவதை கண்கா ணிக்கும் பொறுப்பும் ஆணை யத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.


இந்த ஆணையத்தின் தலைவர் 3 ஆண்டுகள் பதவி யில் இருப்பார்.கடந்த ஜன.8 முதல் தலைவர் பதவியும் மே மாதம் முதல் உறுப்பினர் பத விகளும் காலியாக உள்ளன. பல மாதங்கள் ஆகியும் இன்று வரை நியமிக்கப்படவில்லை.


இதுதொடர்பாக, குழந்தை உரிமைகள் செயற் பாட்டாளர் அ.தேவநேயன் கூறும்போது, ‘‘ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் சந்திக் கும் பிரச்சினைகள் அதிகரித் துள்ளன. இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக் குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு தீர்வு காணுவதும், அவர்களுக்கு உதவுவதும் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் பணியாகும்.


ஆனால், தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலி யாக இருப்பதால் ஆணையம் செயல்படாமல் முடங்கி உள்ளது. எனவே,இந்த இடங் களை உடனே நிரப்பவேண் டும். குழந்தைகள் உரிமை, பாதுகாப்பு, உளவியல் நிபு ணத்துவம் மற்றும் கள அனு பவம் கொண்டவர்களை மட் டுமே இப்பதவிகளில் நிய மிக்க வேண்டும். நிதி ஒதுக் கீட்டை அதிகப்படுத்தி தன் னாட்சி கொண்ட அமைப் பாக செயல்பட வேண்டும்’’ என்றார்.


இதுதொடர்பாக, சமூக நலத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு நிறைய விண்ணப் பங்கள் வந்துள்ளன. அவற்றை ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இம்மாத இறுதிக்குள் நியமிப்பதற் கான வாய்ப்பு உள்ளது.


ஆணையத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நிய மிப்பவர்கள் குழந்தைகளை கையாள்வதில் நிபுணத்துவம் பெற்றவர்களாகத்தான் உள்ளனர். எனவே, எந்த தலையீடும் இன்றி தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் அமைப்பாகத்தான் ஆணை யம் செயல்பட்டு வருகிறது. பிற மாநிலங்களுடன் ஒப்பி டும்போது தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணை யம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


இவ்வாறு அவர் கூறினார்.


Comments