பழமையைத் தூக்கி எரிந்து பண்பாட்டு மாற்றத்தை ஏற்றுக்கொண்டதால் உயரம் தொட்ட கமலா ஹாரிஸ்


கமலா ஹாரீஸின் தாத்தா மன்னார் குடியைச் சேர்ந்த, பைங்காநாடு வெங்கட் ராமன் கோபாலன் ஐயர்  என்பவர் ஆங்கி லேயர் காலத்து இந்திய அரசுத்துறை நிர் வாகத்தலைமை (அய் சி எஸ்) அதி காரியாக இருந்தவர்.  இவர்  1960களில் நேரு ஆட்சி காலத்தில் வெளியுறவுத் துறை அலுவலகத் தில்  அதிகாரியாக இருந்த கோபாலனுடைய மகள் ஷியாமளா, 1958ஆம் ஆண்டு தன் னுடைய  19 வயதில் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.


அங்கு  கல்லூரியில் அவருக்கு அறி முக மான ஜமைக்கா நாட்டை  சேர்ந்த டொனால்ட் ஹாரிஸ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.


 டொனால்ட் ஹாரிசின் மூதாதையர்கள் கென்யா நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர் கள் ஸ்பானிய காலனி ஆட்சியில் அடிமை களாக கரும்புத்தோட்டத்தில் பணிபுரிய ஜமைக்கா கரும்புத் தோட்ட அதிபர் ஒரு வருக்கு விற்கப்பட்டனர். பிறகு ஜமைக்கா குடியரசாக மலர்ந்த பிறகு அங்கு அடிமை முறை ஒழிக்கப் பட்டது,


ஷியாமளாவிற்கும் டொனால்ட் ஹாரி ஸுக்கும் இரண்டு பெண்  குழந்தைகள் பிறந்தனர் - கமலா ஹாரிஸ் &மாயா ஹாரிஸ். 1971 ஆம் ஆண்டு டொனால்டிடம் இருந்து விவாகரத்துப் பெற்றுக் கொண்டார் ஷியா மளா.  பிறகு இரண்டு குழந்தை களையும்  அமெரிக்காவில் வளத்தார்  கமலாவின் சகோதரி, மாயா ஹாரிஸ் தன்னுடைய 17 வயதில், பள்ளி மாணவியாக இருந்தபோது ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுக் கிறார்.


அவருக்கு மீனாக்ஷி (மீனா ஹாரிஸ்) என்று  பெயர் சூட்டி வளர்த்தனர். திருமணம் ஆகாமல் இவ்வாறு குழந்தை பெற்றுகொள் வது அங்கு பெரிதாக பார்க்கப் படுவது இல்லை.  ஷியாமளா, கமலா, மாயா மூவரும் சேர்ந்து அந்தக் குழந்தையை எந்தக் குறையும் இல்லாமல் வளர்த்திருக்கிறார்கள்.  அதன் பல காலத்திற்கு பிறகு, மாயா தன்னுடைய கல்லூரிக் காலத்து நண்பரான டோனி என்கிற கருப்பினத்தவரை திரு மணம் செய்து கொண்டார்.


மாயா சட்டம், பயின்று அவரும் ஒரு பிரபலமானவராகதான் இப்போது இருக் கிறார். மாயாவின் மகள் மீனா (மீனாக்ஷி) சட்டம் பயின்று தற்போது  வழக்கறிஞரா கவும் எழுத்தாளராகவும் இருக்கிறார்.  மீனா திருமணம் செய்திருப்பது நைஜீரியா நாட்டினைச் சேர்ந்த நிகோலஸ் என்பவரை! கோபாலனின் ஒரே மகனும் ஷியாமளாவின் உடன்பிறந்த சகோதரருமான பாலச்சந்தி ரன் திருமணம் செய்திருப்பது மெக்சிகன் நாட்டைச் சேர்ந்த  தென் அமெரிக்கப் பெண்மணி. அவர்களின் மகள் சாரதா தற் போது அமெரிக்காவில் ஆங்கிலப் பேராசி ரியராக இருக்கிறார்.


கமலா ஹாரிஸ் 2014ஆம் ஆண்டு, தன்னுடைய 49ஆவது வயதில் டக்லஸ் என்கிற ஒரு யூத இனத்தவரைத் திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர் கலிபோர்னியாவில் வசிக்கிறார். ஷியாமளா வின் முதல் தங்கை, அதாவது கமலாவின் முதல் சித்தி, டாக்டர் சரளா தற்போது சென்னையில் வாழ்ந்துவருகிறார்.  அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை.


ஷியாமளாவின் இரண்டாவது தங்கை, அதாவது கமலாவின்  இரண்டாவது சித்தி, மகாலட்சுமி தற்போது கனடா நாட்டில் அவர் கணவருடன் வாழ்ந்து வருகிறார். அவர் கள் குழந்தை பெற்றுக் கொள்ளவில்லை.


மொத்தத்தில் பைங்காநாடு வெங்கட் ராமன் கோபாலன்  அவர்களுடைய வாரி சுகள் தங்கள் வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழ்ந்து, இனம், மொழி, ஜாதி, மதம் அனைத் தையும் அடித்துத் துவம்சம் செய்திருக் கிறார்கள். அதன் விளைவாக இன்று கமலா ஹாரிஸ் அமெரிக்க நாட்டின் துணை அதி பராகப் பதவி ஏற்க இருக்கிறார்!!


சமூகப் பண்பாட்டு அடிப்படையில் உருவான மாற்றத்தால் அந்த மாற்றத்தை ஏற்றுக் கொண்டு அதனோடு பயணித்த பெண்ணால் தான் இன்று அமெரிக்காவில் இரண்டாம் பெண்மணியாக மாற முடிந்தது. பெரியாரைப் பழித்துக் கொண்டிருந்த, ஒரு சமுதாயத்தில் சிலர், அவரது கொள்கை களைப் பின்பற்றி உயர்ந்துள்ளனர்.


இந்திய வம்சாவழியில் வந்த கமலா ஹாரிஸை, அமெரிக்கத் துணை அதிபராகக் கொண்டாடும் ஒரு கூட்டம் தான், இத்தாலி யில் பிறந்து, இந்தியரான ராஜீவ் காந்தியை மணந்து, இந்தியப்  பண்பாட்டைப்  பின்பற்றி வாழும் சோனியா காந்தியை அந்நியர் என்று தூற்றுகிறது.


பாடகர் சுதா இரகுநாதனின் மகள் ஆப்பிரிக்கர் ஒருவரைத் திருமணம் செய்ததையும் கண்டித்தது.


கமலா ஹாரிஸின் தாய் தன்னை கருப்பின கலாசாரத்திற்கு மாற்றிக் கொண்டு தனது இரு மகள்களையும் அவ்வாறே வளர்த்துள்ளார். நாங்கள் தன்நம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார் என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.


Comments