சென்னை உயர்நீதிமன்றத்தில் காணொலி வழக்கு விசாரணையின்போது இடையூறு

சென்னை, நவ. 21- அரியர் தேர்வு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் 20.11.2020 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் சத்தியநாரா யணன், ஹேமலதா ஆகியோர் காணொலி வாயிலாக விசாரணையை நடத்தினர்.  அப்போது, வழக்கு தொடர்பான விசாரணை நிலவரத்தை அறிந்துகொள்வதற்காக ஏராளமான மாணவர்கள் காணொலியில் இணைந்தனர். ஒரே நேரத்தில் 100க்கும் மேற்பட்டடோர் இணைந்த தால் விசாரணைக்கு இடையூறு ஏற்பட்டது. வீடுகளின் தொலைக் காட்சி ஒலி, மாணவர்களின் பேச்சுகள் என தொடர்ந்து இடையூறு ஏற்பட்டதால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்தனர்.


மாணவர்கள் அமைதியாக காணொலியை விட்டு வெளி யேறும்படி நீதிபதிகள் அறிவுறுத்தினர். ஆனால் யாரும் வெளியேற வில்லை. இதனால் விசாரணை நிறுத்தப்பட்டது. ஒவ்வொருவராக காணொலியில் இருந்து நீக்கப்பட்டனர். மாணவர்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தனர்.


Comments