கழகப் பொறுப்பாளர்களின் பாராட்டத்தக்க செயல்

கோவை, கோபிச்செட்டிப்பாளையம்,   மேட்டுப்பாளையம்,   பொள்ளாச்சி,  திருப்பூர் கழக மாவட்டங்களின் சார்பில் விடுதலை சந்தாக்கள்  முதல் தவணையாக  கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்கோபி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்  31.10.2020 அன்று மாவட்டத் தலைவர் இரா.சீனுவாசன் 7 விடுதலை சந்தா, மாவட்டச் செயலாளர் ந.சிவலிங்கம் 3 சந்தா, மண்டலச் செயலாளர் பெ.இராஜமாணிக்கம் 5 சந்தா, 1 உண்மை சந்தா, 1 பெரியார் பிஞ்சு சந்தா உள்பட மொத்தம் 15 விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா. ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர். மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சார்பில் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி, மாவட்டச் செயலாளர் அரங்கசாமி ஆகியோர் விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ. 12,000 கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன், அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், ஆசிரியர் குப்புசாமி, கு.இரவிக்குமார்.கோவை கிழக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.ப.ரோகினி ஒரு விடுதலை சந்தாவும், காங்கிரஸ் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் என். காளீஸ்வரன் ஒரு சந்தாவும், கோவை மாவட்டச் செயலாளர் தி.க.செந்தில்நாதன் - தனலட்சுமி மற்றும் குடும்பத்தினர் ஒரு சந்தாவும், பிள்ளையார் குளம் பகுதிச் செயலாளர் ஒரு சந்தாவும் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். கோவை போத்தனூர் பகுதி திமுக பொறுப்பாளர் ஆர்.கார்த்திகேயன் ஒரு சந்தா, திமுக மகாலிங்கம் ஒரு சந்தா, திமுக குறிச்சி பகுதி இளைஞரணி அமைப்பாளர் ச.புவனேஷ் ஒரு சந்தா, திமுக கே.அரங்கசாமி ஒரு சந்தா, திமுக க.ஆதவன் ஆறுமுகம் ஒரு சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன் தமிழ்முரசு, புண்ணியமூர்த்தி, ரா.சி. பிரபாகரன், தமிழ் நியூட்டன், குமரேசன், வெற்றிச்செல்வன். கோவை மாவட்டம் மரகத சோழன் - ரோஜாராணி மகன் சூர்யா 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 458 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்றதன் மகிழ்வாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினார். உடன் அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், கோவை மண்டலச் செயலாளர் ச.சிற்றரசு, குனியமுத்தூர் பகுதி செயலாளர் தமிழ்முரசு, கோவை தெற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, குமரேசன், வெற்றிச்செல்வன், விடுதலை இராஜா ஆகியோர் உடனிருந்தனர்.
திருப்பூர் மாவட்ட கழகம் சார்பில் முதற்கட்டமாக "விடுதலை" 10 சந்தா , "உண்மை" சந்தா 2,  " மாடர்ன் ரேசனலிஸ்ட் சந்தா 1 ஆகியவற்றிற்கான தொகை ரூ.12,640-அய் திருப்பூர் மாவட்ட கழகத்தோழர்கள் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினர்.  (31.10.2020) பொள்ளாச்சி நகர திராவிடர் கழகம் சார்பில் பொதுக்குழு உறுப்பினர்கள் பொள்ளாச்சி பரமசிவம், மாரிமுத்து, நகரத் தலைவர் வீரமலை, நகரச் செயலாளர் நாகராஜ், நகர அமைப்பாளர் செழியன் ஆகியோர் 15 விடுதலை  சந்தா,  5 உண்மை சந்தா, 1 மாடர்ன் ரேஷனலிஸ்ட் சந்தாக்கான  தொகை  ரூ.20,050  பொள்ளாச்சி நகர திராவிடர் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். திராவிடர் கழக தாராபுரம் ஒன்றிய  செயலாளர் ச.முருகன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் விடுதலை ஒரு  சந்தா மற்றும் உண்மை சந்தா வழங்கினார். 


Comments