சி.கருப்புசாமி - விஜயா ஆகியோரின் 'பெரியார் இல்ல'த்தை கழகப் பொதுச் செயலாளர் திறந்தார்


செந்துறை, நவ. 6-- அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றிய அமைப்பாளர் சி.கருப்புசாமி - விஜயா ஆகியோரால் கட்டப்பட் டுள்ள புதிய இல்ல அறிமுக விழா 30.10.2020 வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் பழமலை நாதபுரம் கிராமத்தில் சிறப்பாக நடைபெற்றது.


கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் நிகழ்ச் சிக்கு தலைமையேற்று ரிப்பன் வெட்டி இல்லத்தை அறிமுகம் செய்து வைத்தார். மண்டல தலை வர் இரா.கோவிந்தராஜன், மண் டல செயலாளர் சு.மணிவண்ணன், மாவட்ட தலைவர் விடுதலை நீல மேகன் மாவட்ட செயலாளர் கசிந்தனைச் செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ், புழல் சா.ராஜேந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.ஆத்திகர் வீடு குடிபோகும் போது மாட்டை அழைத்துச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று காட்ட தன் வீட்டு நாயை அழைத்து வந் தார் தோழர் கருப்புசாமி .அவரது வீட்டு மாடியில் கழகக் கொடியினை மண்டல இ.அ.செயலாளர் பொன்.செந்தில்குமார் ஏற்றி வைத்தார்.


பங்கேற்றோர்


மாவட்ட அமைப்பாளர் இரத் தின.இராமச்சந்திரன், மாவட்ட ப.க.தலைவர் தங்க.சி வமூர்த்தி, மாவட்ட இ.அ.தலைவர் சு.அறி வன். மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.சிவக்கொழுந்து, மு - முத்தமிழ்செல்வன், ஆ.இளவழ கன், இராசர் செல்வக்குமார், வெ.இளவரசன் அரியலூர் ஒன்றிய நிருவாகிகள் மு.மருதமுத்து, மு.கோபாலகிருட்டிணன் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் பங் கேற்றனர்.


Comments