லக்னோ, நவ. 23- ஹத்ராஸ் பகு தியில் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத் தினர் வீட்டுக்காவலில் வைக் கப்பட்டுள்ளதற்கு ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஹத்ராஸ் பகுதியில் இளம் பெண் ஒருவர் கூட்டுப் பாலி யல் வன்கொடுமைக்கு ஆளாக் கப்பட்டு கொலை செய்யப் பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இந் நிலையில், பாதிக்கப் பட்ட இளம்பெண்ணின் குடும் பத்தினர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண் டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப் பதாவது: ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம் பவத்தில் கொலை செய்யப் பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர் வீட்டுக்காவ லில் வைக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச பாஜக அரசு பாதிக்கப்பட்டவர் களை முடக்கி வைத்து அவர் களை துன்புறுத்துகிறது. ஹத் ராஸ் வழக்கில் நியாயமான பதிலை நாடே எதிர்பார்க்கி றது என்று தெரிவித்துள்ளார்.