ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:  • உ.பி. பாஜக அரசு, மதம் மாறி திருமணம் செய்யும் முறையை (லவ் ஜிகாத்) தடுக்கும் சட்ட வரவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

  • கார்ப்பரேட் நிறுவனங்களின் கையில் வங்கிகள் தரப்படுவது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என தலையங்கச் செய்தி கூறுகிறது.


டெக்கான் கிரானிக்கல், சென்னை:  • தொலைபேசியில் இருந்து செல்பேசிக்கு தொடர்பு கொள்ள எண்களுக்கு முன் ஜீரோ எண்ணையும் சேர்க்க வேண்டும் என்றும் இது வருகிற ஜனவரி 2021 முதல் நடை முறைப்படுத்தப்படும் என தொலைத்தொடர்புத் துறை தெரிவித்துள்ளது.


இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • இந்து பெண்ணைக் கடத்திச் சென்று இஸ்லாம் மதத்திற்கு மாற்றி பின்னர் திருமணம் செய்ததாக காவல் துறை பதிவு செய்த வழக்கை உ.பி. அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. வயதுக்கு வந்த இரு பாலர் தங்கள் வாழ்விணையரைத் தேர்ந் தெடுக்க எல்லா உரிமையும் உண்டு என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

  • வங்கிகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்திட உரிமம் வழங்குவதை எச்சரிக்கையுடன் கையாள வேண்டும் என தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.


தி டெலிகிராப்:  • மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மா நிலத்தில் போராடும் விவசாயிகள், டில்லி சலோ என்ற பேரணியை நவம்பர் 26 முதல் துவங்கிட உள்ளதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.


நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:  • கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும் கட்சியின் நிர்வாகத்தை நடத்தி வந்தவருமான அகமது படேல் எம்.பி. சிகிச்சை பலனின்றி மறைவுற்றார்.

  • ரிபப்ளிக் தொலைக்காட்சி இயக்குனர் அர்னாப் கோஸ்வாமி மீது அன்வாய் நாயக் மரணம் குறித்து புகார் அளித்த சிவசேனா சட்ட மன்ற உறுப்பினர் பிரதாப் சார் நாயக் தொடர்புள்ள நிறுவனங்களில் அமலாக்க பிரிவினர் சோதனை மேற்கொண்டது, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவட் குற்றம் சாட்டியுள்ளார்.


தி இந்து:  • கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வங்கிகள் நடத்த அனுமதிப்பது மோசமான யோசனை. மக்கள் பணத்தை அவர்கள் கையாள அனுமதிக்கக் கூடாது என தலையங் கத்தில் கூறப்பட்டுள்ளது.

  • எத்தகைய உறவுகள் அனுமதிக்கப்பட வேண்டும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அரசு தீர்மானிக்கக் கூடாது என பல நீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிக்காட்டி வெனீஸ் நகரத்தில் இருந்து கல்வியாளர் ரமா சீனிவாசன் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.


குடந்தை கருணா


24.11.2020


Comments