சாலையோரம் சிதறிக் கிடந்த ஆதார் அட்டைகள் அஞ்சல் துறையினர் தீவிர விசாரணை

தூத்துக்குடி, நவ. 19- தூத்துக்குடி அருகே மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட தாளமுத்துநகர்- ராஜபாளையம் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானம் அருகே சாலை யோரத்தில் ஏராளமான புதிய ஆதார் அட்டைகள் சிதறிக் கிடந்தன.


18.11.2020 அன்று காலை அந்தப் பகுதியில் குப்பை அள்ளு வதற்காக சென்ற ஊராட்சி துய்மை பணியாளர்கள் இந்த ஆதார் அட்டைகளை பார்த்துள்ளனர்.


இதையடுத்து அங்கு கிடந்த சுமார் 50 ஆதார் அட்டைகளை சேகரித்த தூய்மைப் பணியாளர்கள் மாப்பிளையூரணி ஊராட்சி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். இந்த ஆதார் அட்டைகள் எப்படி அங்கு வந்தன என்பது தெரியவில்லை.


இது குறித்து தகவல் அறிந்ததும் தூத்துக்குடி அஞ்சல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று ஆதார் அட்டைகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.


மேலும், இந்த ஆதார் அட்டைகள் எப்படி அங்கு வந்தன, அஞ்சல்காரர் யாராவது அஜாக்கிரதையாக விட்டுச் சென்றனரா என்பது குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெறுகிறது.


இதில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அஞ்சல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


நீட் வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு; முதல்வர் பழனிசாமி பேட்டி


கோவை, நவ. 19- கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தி யாளர்களிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிய தாவது; 


"உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி நாடு முழுவதும் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்பது தான் அதிமுக அரசின் நிலைப்பாடு. இருப் பினும் நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப் படுவதை அறிந்து, அவர்களின் நலனுக்காக 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்தவர்களில் 41 சதவீதம் பேர் அரசு பள்ளி மாணவர்கள் ஆவர். அதில் வெறும் 6 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைத்தது. தற்போது வழங்கப் பட்டுள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 313 பேருக்கு மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.


Comments