பாப்பிரெட்டிப்பட்டியில் விடுதலை வாசகர் வட்டம் தொடக்கம் வாசகர்கள் அனைவருக்கும் இயக்கப் புத்தகம் வழங்கப்பட்டது


தருமபுரி நவ. 19- தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப் பட்டியில் விடுதலை வாசகர் வட்ட தொடக்க விழா  6-11-2020 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி அளவில் பாப்பி ரெட்டிப்பட்டி பெரியார் மன்றத்தில்  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு வாசகர் வட் டத் தலைவர் பாவலர் பெரு முல்லையரசு தலைமை தாங் கினார். வாசகர் வட்ட செய லாளர் தங்கராசு வரவேற் புரையாற்றினார். மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வீ.சிவாஜி, மாவட்ட துணை செயலாளர் பெரியார் சேட்டு, செங்கல் மாரியப்பன், பெரியார் பெருந்தொண்டர் க.திராவிட முத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


நிகழ்ச்சியை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலை வர் மாரி.கருணாநிதி தொகுத்து வழங்கினார்.               விடுதலை வாசகர் வட்டத்தை திரா விடர் கழக மாநில அமைப்புச் செயலாளர் ஜெயராமன் தொடங்கி வைத்து வருகை தந்த அனைவருக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய கோயில் நுழைவு போராட்டம் செய்தவர் யார்? எதிர்த்தவர் யார்? என்னும் நூலை வருகை தந்த அனைவருக்கும் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அதேபோல வாசகர் வட்டத் தலைவர் பாவலர் பெரு.முல்லையரசு தான் எழுதிய கவிதை தொகுப்பு நூலை வாசகர்களுக்கு  வழங்கினார். இந்நிகழ்வில் மண்டல கழகத் தலைவர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு கருத்துரை யாற்றினார். கடத்தூர் விடு தலை வாசகர் வட்டத் தலை வர் கோ.தனசேகரன், வினோத் குமார், சுகுந்தன், நாகேந்திரன், கார்த்திக், ஆசிரியர் அமுத கொடை, பாபு சின்னதுரை, மோகன்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


விடுதலை வாசகர் வட்ட புதிய பொறுப்பாளர்கள்: தலைவர்-தங்கராசு, செயலா ளர்-அமுதகொடை, அமைப் பாளர் -மா.பூங்குன்றன், துணை தலைவர்-வெண்ணிலா அன்பரசு, இணை செயலாளர்-த.ஆனந்தன், துணை செயலா ளர் -க.ஜீவிதா,  வாசகர் வட்ட புரவலர்கள்: பெரு.முல்லை யரசு, திராவிட முத்து, செங் கல் மாரியப்பன், ச.தானபாபு, கோ.நாகேந்திரன், தா.கந்த சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


மாரி.கருணாநிதி, தங்க ராஜ், பெரு.முல்லையரசு, க.அமுதகொடை ஆகியோர் விடுதலை சந்தாவும், பெரி யார் பிஞ்சு சந்தாக்களையும் வழங்கினர். இறுதியாக ஒன் றிய கழக அமைப்பாளர் மு.சிலம்பரசன் நன்றி கூறினார்.


Comments