கடத்தூரில் 'விடுதலை' வாசகர் வட்டம்


தர்மபுரி, நவ.5-  கடத்தூர் தமிழ்ச் செல்வி அச்சகத்தில் 31.10.2020 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு 'விடுதலை' வாசகர் வட்ட தொடக்க விழா வாசகர் வட்ட தலைவர் கோ.தனசேகரன் தலைமையில் நடை பெற்றது. வாசகர் வட்ட செயலா ளர் ஆசிரியர் நடராஜன் வரவேற் புரையாற்றினார்.


மாவட்ட கழகத் தலைவர் வீ.சிவாஜி, மண்டல கழகத் தலைவர் அ.தமிழ்ச்செல்வன், மாணவர் கழக துணைச் செயலாளர் த.திலீபன், நகர தலைவர் சுப.மாரி முத்து, ஒன்றிய கழகத் தலைவர் பெ.சிவலிங்கம், மாவட்ட பகுத்தறி வாளர் கழக செயலாளர் மு.பிரபா கரன், மாவட்ட ஆசிரியரணி துணைச்செயலாளர் தீ.சிவாஜி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கழக மாநில அமைப்புச் செய லாளர் ஊமை, ஜெயராமன் விடு தலையின் தோற்றமும் வளர்ச்சியும் அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்தும் தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார்.                        


'விடுதலை'யால் ஏற்பட்ட மாற் றங்கள் என்னும் தலைப்பில் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் மாரி.கருணாநிதி விடுதலை  தொடங் கிய நாள் முதல் இந்த நாள் வரை விடுதலையால் ஏற்பட்ட மாற்றங் கள் குறித்து சிறப்புரையாற்றினார்.


வாசகர் வட்ட கூட்டதில் மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர்  சிந்தல்பாடி குபேந்திரன், தாள நத்தம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முனுசாமி ஆகியோர் ஆறுமாத 'விடுதலை' சந்தா தலா ரூபாய் 900 அளித்தனர்.


சொ.பாண்டியன் திமுக, ரேகட அள்ளி ஆசிரியர் நா.மேகநாதன், சிந் தல்பாடி ஊராட்சி மன்ற தலைவர் குபேந்திரன், புட்டிரெட்டிபட்டி ஆசிரியர் மு.செந்தில்குமார், சின்ன சாமி அதிமுக, தாளநத்தம் ஊராட்சி துணைத் தலைவர் முனுசாமி, கணினி இயக்குநர் தங்கராஜ், ஓட் டுநர் முருகன், பாலகிருஷ்ணன், சமரசம், தமிழின்பன், பத்மநாபன், அறிவுமதி, பெரியார் பிஞ்சு செந் தமிழன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.    மாதத்தில் இரண் டாவது வார சனிக்கிழமைகளில் தவறாமல் கூட்டங்களை நடத்து வது, அதேபோல ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கிராமங்கள் தோறும் சிறப்பு வாசகர் வட்ட கூட்டங்களை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அறிவுமதி நன்றி கூறினார்.


Comments