'விடுதலை' சந்தா சேர்ப்பில் கோவைத் தோழர்களின் அணுகுமுறை வழிகாட்டுகிறது

13 மணி நேரத்தில் 90 சந்தாக்கள் குவிந்தன


கரோனா காலத்திலும் கோவை மக்கள் 1,14,470 ரூபாய் சந்தாத் தொகை வழங்கினர்இரஷ்ய புரட்சி கண்ட மாமேதை லெனினுக்குப் போர் வாளாக இருந்தது 'இஸ்காரா' எனும் தீப்பொறி. சமுதாயப் புரட்சி கண்ட தந்தை பெரியாருக்குக் கேடயமாக இருந்தது- இன்றும் இருப்பது 'விடுதலை' என்றார் மூத்த இதழியலாளர் சோலை.


'விடுதலை' நாளேட்டுக்கு வெள்ளித் தோட்டாக் களை அள்ளித் தாரீர் என்று 'விடுதலை' ஏடு அறிக்கை வெளியிட்டால், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வேண்டுகோள் விடுத்தால் வந்து குவிந்து விடும்! போதும் நிறுத்துக! தேவையான நிதி வந்து சேர்ந்து விட்டது என்று 'விடுதலை'யைப் போல அறிக்கை வெளியிட்ட ஏட்டை வேறு எங்கும் காட்டமுடியாது.  தங்கம் கேட்டாலே அள்ளிக் கொடுக்கும் தோழர்கள் சந்தா கேட்டால் மறுக்கவாப் போகிறார்கள்?


இதோ கோவை வழிகாட்டுகிறது - 'விடுதலை' சந்தாக்களை கொட்டி வழங்கியது :


ஜாதி ஒழிப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ண டிமை ஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, ஆரிய ஆதிக்க எதிர்ப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, சுரண்டல் ஒழிப்பு என்ற அழிப்பு, ஒழிப்புப் பணிகள் மூலம் இந்நாட்டு மக்களுக்கு ஆக்கப் பணி புரிந்த 'விடுதலை' கண்ட இன்னல்கள் ஏராளம். இப்போதும் ஒரு நெருக்கடி. கரோனா எனும் பேராபத்தால் நாடே முடங்கியது. இயக்கம் சார்ந்த பல நாளேடுகளும் கூட முடங்கின. ஆனால், 'விடுதலை'யோ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மதி நுட்பத்தால் பொருளாதார இழப்பு களையெல்லாம் தடந்தோளில் தாங்கிக் கொண்டு இணைய வழியாக தன் பணியைத் தொடர்ந்தது. கரோனா காலத்தில் பாஜக அரசின் பாசிசத் திட்டங் களை, நாட்டோர்க்கு எடுத்துக் காட்டியது 'விடுதலை'. அதை எதிர்த்து முறியடிக்க இயக்கம் கட்டியது. சமூக நீதிக் களத்தில் சமரசமில்லாமல் போராடும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவாயுதமாக 'விடுதலை' களமாடி வருகிறது.


ஓய்வறியாமல் உழைத்து வரும் ஒப்பற்ற தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக ஆயிரமாயிரம் சந்தாக் களை அள்ளிக் கொடுக்க சந்தா சேர்ப்பு இயக்கம் தமிழகம் தழுவி நடைபெற்று வருகிறது. இதில் கோவை கழகத் தோழர்களின் அணு முறை அரியது - அளவிடற்கரியது:


எப்படி, ஏன்? இதோ பாருங்கள்:


தமிழன் வீடு என்பதற்கு அடையாளம் 'விடுதலை' என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் புகழாரம் சூட்டியதை சூளுரையாக ஏற்ற கோவை கழகத் தோழர்கள் 2020 நவம்பர் 1ஆம் நாள் பெரியார் பிஞ்சுகள் முதல் பெரியார் பெருந்தொண்டர்கள் வரை பாகுபாடின்றி திரண்டு வந்து திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் 'விடுதலை' விளைச்சலை அறுவடைச் செய்ய வீடு வீடாகச் சென்றனர். உற்றார், உறவினர், அரசியல் கட்சி நண்பர்கள் - நல்லோர் என சந்தித்தனர். இந்த அணுகுமுறை கூட்டுக் குழு மனப்பான்மையை வெளிக்காட்டியது. வெளியாரிடம் கழகத்தின் மீதான மதிப்பைக் கூட்டியது.


 அ.ம.மு .கழக கோவை கிழக்கு மாவட்டச் செயலாளர், அதிமுக சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் மா.ப.ரோகினி முதல் சந்தாவை வழங்கி, தந்தை பெரியார் பிறந்த நாளை கொண்டிய விதம் குறித்து குறிப்பிட்டு மகிழ்ந்தார். 8.30 மணிக்கு கழக மாவட்டச் செயலாளர் தி.க.செந்தில்நாதன் இல்லத்தில் 'விடுதலை' சந்தா சேர்ப்பு பணி - அவரது இல்லத்தி லேயே காலைச் சிற்றுண்டி.


10.25 மணிக்கு காங்கிரஸ் மாநிலச் செய்தித் தொடர்பாளர் காளீஸ்வரன் இல்லம் சென்றது சந்தா திரட்டும் படை. உற்சாகத்துடன் வரவேற்ற காளீஸ் வரன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் செயல்பாடு களை வெகு வாகப் பாராட்டினார். மேலும், பீகார் தேர்தல் பரப்புரையில் பெரியார் குறித்து இளம் தலைவர் இராகுல் காந்தி பேசியதாகக் கூறி மன மகிழ் வுடன் சந்தா வழங்கினார்.


11.15 மணிக்கு கோவை பொத்த னூர் பகுதி திமுக பொறுப்பாளர் ஆர்.கார்த்திகேயன் அலுவலகத்தில் திமுக தோழர்களுடனான சந்திப்பு நடைபெற்றது. அப்போது, ஆர்.கார்த் திகேயன் 1 ஆண்டு சந்தா, திமுக மகாலிங்கம் 1 ஆண்டு 'விடுதலை' சந்தா, திமுக குறிச்சி பகுதி இளைஞரணி அமைப்பாளர் ச.புவ னேஷ் 1 ஆண்டு 'விடுதலை' சந்தா, திமுக கே.அரங்கசாமி அரை யாண்டு 'விடுதலை' சந்தா, திமுக க.ஆதவன் ஆறு முகம் 1 ஆண்டு 'விடுதலை' சந்தா உள்பட 5 'விடுதலை' சந்தாக்களை வழங்கி மகிழ்ந்து, மேலும் சந்தாக்களை திரட்டி வழங்குவதாக உறுதி யளித்தனர். தோழர்களை உற்சாகப்படுத்தினர்.


11.35 மணிக்கு மதிமுக மாநில இளைஞரணி செயலாளர் கோவை வே.ஈஸ்வரன் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றனர் தோழர்கள். அலுவலக வாசல் வரை வந்து அழைத்துச் சென்ற ஈஸ்வரன் மற்றும் மதிமுகவினர் இன்முகத்துடன் இனம் காக்கும் ஏடாம் 'விடுதலை'க்கு சந்தாக்களை வழங்கி சரித்திரம் படைத்தனர்.


12.15 மணிக்கு திமுக குறிச்சி பகுதி மகளிர் தொண்டரணி துணை அமைப்பாளர் என்.பரிமளா ராணி, திமுக கோவை  குறிச்சி வடக்குப் பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் அ.காளிமுத்து, திமுக இளைஞரணி நிர்வாகிகள், விசிக அருண்குமார், கழக மகளிரணி மண்டலச் செயலர் கலைச்செல்வி, திரு மண நிலைய பொறுப்பாளர் இராஜேஸ்வரி ஆகி யோர் 'விடுதலை' சந்தாக்களை வழங்கி வரலாற்றின் பக்கத்தில் இணைத்துக் கொண்டனர். அவ்வப்போது இயக்கக் குடும்பத்தவருடன் சந்திப்பு என நீண்டது 'விடுதலை' விளைச்சல் வெற்றிப் பயணம்


2.07 மணிக்கு பெரியார் மணியம்மை பல்கலைக் கழக முன்னாள் இணை துணைவேந்தர் முனைவர் தவமணி அம்மையார் இல்லத்தில் 'விடுதலை' களம் அமைத்து, 10 சந்தாக்களை அறுவடை செய்தனர். 15 நிமிடம் உணவு இடைவேளைக்குப் பின் பயணம் தொடர்ந்தது.


நகைக்கடைக்காரர், நம் கொள்கையாளர் பெரியார் பெருந்தொண்டர் இ.கண்ணன் வாசல் வந்து அழைத்துச் சென்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு  தங்கமான விடுதலைக்கு 11 சந்தாக்கள் வழங்கி பொன்னேட்டில் பதித்துக் கொண்டார்.


வடவள்ளி முடித்திருத்தகத் தோழர் கணேஷ், திமுக தொண்டர் பால்குட்டி உள்பட 7 பேரிடம் திரட் டிய விடுதலை சந்தாக்களை மாலை 4.50 மணிக்கு கோவை மாவட்ட இளைஞரணித் தலைவர் திராவிட மணி, வடக்குப் பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன் வழங்கினர்.


கு.வெ.கி.ஆசான் குடும்பத்தினர்


கு.வெ.கி. ஆசான் சாரதாமணி, கு.வெ.கி. செந்தில் ஆகியோர் 'விடு தலை' சந்தா வழங்கினர். அப்போது, ஆசான் அவர்களின் எழுத்துகளை தொகுத்து வருவதாக சாரதாமணி அம்மையார் கூறினார். இதனைத் தொடர்ந்து, 5.07 மணிக்கு விடு தலைப் படை புளிய குளம் சென்ற டைந்து. அங்கே, வீரமணி இல்லத் தில் கூடியிருந்த திமுக மகளிரணி பொறுப்பாளர் இளமதி மற்றும் வீரமணி ஆகியோர் 5 சந்தாக்களை வழங்கினர். புளியகுளம் பகுதி திமுக செயலாளர் சீனு வாசன் 'விடு தலை' சந்தா வழங்கி குடும்பத்துடன் ஒளிப் படம் எடுத்து மகிழ்ந்தார். பின், வெள்ளலூரில் கழக கோவை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிர பாகரன் 2 சந்தாக்களை வழங்கினார்.


திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் இல்லத்துக்கு இரவு 7.5 மணிக்கு சென்றது படை. எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிரபாகரன் தோழர்களுக்கு பயனாடை அணிவித்து 5 சந்தாக் களை வழங்கி அகம்மகிழ்ந்தார்.


7.20 மணிக்கு குனியமுத்தூர் பகுதி கழகச் செயலா ளர் தமிழ்முரசு குடும்பத்தினர் 4 சந்தாக்களையும், தெற்குப் பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி 1 சந்தா வையும் வழங்கினர்.


 இரவு 9 மணிக்கு பொள்ளாச்சியில் நிலைகொண்ட குழுவினருக்கு, காத்துக் கொண்டிருந்த கழக பொதுக்குழு உறுப்பினர்கள் பொள்ளாச்சி பரமசிவம், மாரிமுத்து, நகரத் தலைவர் வீரமலை, நகரச் செயலாளர் நாகராஜ், நகர அமைப்பாளர் செழியன் ஆகியோர் 15 'விடுதலை' சந்தாக்களையும், 5 'உண்மை' சந்தாக்களையும் அள்ளிக் கொடுத்து அன்புமாரி பொழிந்தனர்.


 இவ்வாறு காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9மணி வரை 13 மணி நேரம் நடைபெற்ற சந்தா திரட்டும் பணியில் 'விடுதலை' 33 ஆண்டு சந்தா, 57 அரையாண்டு சந்தா உள்பட 90 சந்தாக்களையும், 7 'உண்மை' சந்தாக்களையும், 3 'பெரியார் பிஞ்சு' சந்தாக்களையும், 2 'மாடர்ன் ரேஷனலிஸ்ட்' சந்தாக் களையும் திரட்டினர்.


 கொடிய கரோனா மானுடச் சமூகத்தை விழுங்கிக் கொண்டிருக்கும் வேளையில் , அவற்றையெல்லாம் துச்சமெனக் கருதி மான மீட்புப் பணியான 'விடுதலை'க்கு சந்தா சேர்ப்பதில் முந்திக்கொண்டு வந்த கோவைத் தோழர்களின் செயல் பாராட்டத்தக் கது. மற்ற மாவட்டத்தினர் பின்பற்ற வேண்டியதாகும்.


 சந்தா திரட்டும் பணியில்,  அமைப்புச் செயலாளர் த.சண்முகம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் தி.க.செந்தில் நாதன், கோவை மண்டலச் செயலாளர் ச.சிற்றரசு, மண்டல மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, திரு மண நிலைய அமைப்பாளர் சி.இராஜேஷ்வரி, குனிய முத்தூர் பகுதி செயலாளர் தமிழ்முரசு,  சிவகுமார், கோவை தெற்கு பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி, மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.பிரபாகரன், மாநகரத் தலைவர் புளியகுளம் வீரமணி, தர்மலிங்கம், மாநில மாணவரணி துணைச் செயலாளர் ரா.சி. பிர பாகரன், இலைக் கடை செல்வம், ஜோதி, தமிழ் நியூட் டன், குமரேசன், வெற்றிச்செல்வன், ராஜா, பகலவன், சுரேசன், ஆறுச்சாமி, சுந்தர்ராஜன், சுரேந்தர், வடிவேல், கார்த்திகேயன், இனியன் ஆகியோர் பங்கேற்றனர்.


Comments